எடப்பாடி பழனிசாமி மீது உண்மைக்கு புறம்பாக பேசியதாக புகார்: போலீஸ் நிலையத்தில் மு.க. ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு
திருவாரூரில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது உண்மைக்கு புறம்பாக பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர்,
திருவாரூர்் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர்்் பூண்டி கலைவாணன், நாகை நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்் செல்வராசு ஆகியோரை ஆதரித்து திருவாரூரில் கடந்த மாதம்(மார்ச்) 20-ந் தேதி நடந்த தேர்்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது கொடநாடு விவகாரத்தில், தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தொடர்்புபடுத்தி உண்மைக்கு புறம்பாக பேசியதாக திருவாரூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், உதவி கலெக்டருமான முருகதாஸ், திருவாரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
வழக்குப்பதிவு
இந்த புகாரின் பேரில் திருவாரூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசன், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் மீது முதல்-அமைச்சர் பற்றி உண்மைக்கு புறம்பான தகவல் பரப்புதல் 171(1ஜி) சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளார்.

Related Tags :
Next Story