இளம்பிள்ளை அருகே பெண் பார்க்க சென்ற தொழிலாளி, கார் மோதி பலி
இளம்பிள்ளை அருகே பெண் பார்க்க சென்ற தொழிலாளி கார் மோதி பலியானார்.
கொண்டலாம்பட்டி,
இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே தப்பக்குட்டையை சேர்ந்தவர் சங்கர் (வயது 29). விசைத்தறி தொழிலாளி. திருமணம் ஆகாதவர். இவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் முடிவு செய்தனர். இதற்காக பல்வேறு இடங்களில் பெண் பார்த்தனர். இதேபோல் மணியனூரிலும் பெண் பார்க்க முடிவு செய்து இருந்தனர்.
நேற்று காலை சங்கர் மற்றும் உறவினர்கள் மணியனூருக்கு சென்றனர். அங்கு பெண் பார்த்த பின்னர் ஊருக்கு புறப்பட்டனர். சங்கர் பஸ்சில் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தார்.
சூளமேடு என்ற இடத்தில் வந்ததும் பஸ்சில் இருந்து சங்கர் கீழே இறங்கி உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக ரோட்டை கடக்க முயன்றார். அப்போது கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த கார் எதிர்பாராதவிதமாக சங்கர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சங்கர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்,
இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story