செந்துறை புனித சூசையப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


செந்துறை புனித சூசையப்பர் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 5 May 2019 10:00 PM GMT (Updated: 2019-05-06T01:32:58+05:30)

செந்துறை புனித சூசையப்பர் ஆலய திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

செந்துறை,

நத்தம் வட்டம் செந்துறையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித சூசையப்பர் ஆலய திருவிழா நேற்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதையொட்டி கொடிபவனி ஆலயத்தில் தொடங்கி நேதாஜிநகர், பாத்திமாநகர், சந்தைப்பேட்டை, குரும்பபட்டி வழியாக மீண்டும் ஆலயத்திற்கு வந்தது. இதைத்தொடர்ந்து பங்குத்தந்தையர்கள் ஆரோக்கியம், ஜான்ஜெயபால், பிரிட்டோ, அருட்சகோதரர் ரூபன் ஆகியோர் கொடியேற்றி திருப்பலியை நடத்தினார்கள். இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

இன்று(திங்கட்கிழமை) காலை புனித விருந்து திருப்பலியும், மாலையில் சப்பர பவனியும் நடக்கிறது. நாளை மாலை பங்குத்தந்தை இன்னாசிமுத்து தலைமையில் திருப்பலியும், இரவு அன்பின் விருந்தும், அதைத்தொடர்ந்து இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.

8–ந்தேதி அலங்கரிக்கப்பட்ட மின்ரதத்தில் புனித சூசையப்பர், செபஸ்தியார் உள்ளிட்ட புனிதர்களின் தேர்பவனி குரும்பபட்டியில் தொடங்கி நேதாஜிநகர், பாத்திமாநகர், சந்தைப்பேட்டை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாக நடக்கிறது. அதைத்தொடர்ந்து திருப்பலி, கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடைகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை செந்துறை பங்குத்தந்தையர்கள், பங்குபேரவை மற்றும் பங்கு மக்கள் செய்துள்ளனர்.


Next Story