சந்தேரி மலைப்பாதையில் லாரியை வழிமறித்து பழங்கள், காய்கறிகளை ருசித்த காட்டுயானை ‘கும்கி’கள் உதவியுடன் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை
சந்தேரி மலைப்பாதையில் லாரியை வழிமறித்து அதிலிருந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை ஒரு காட்டுயானை ருசித்து தின்றது. அந்த காட்டு யானையை, கும்கி யானைகளின் உதவியுடன் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
சிக்கமகளூரு,
சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா சந்தேரி மலைப்பாதையில் ஒரு காட்டுயானை தினமும் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. அந்த காட்டுயானை, அவ்வழியாக செல்லும் வாகனங்களை வழிமறித்தும், விரட்டியும் அட்டகாசம் செய்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த வழியாக ஒரு அரசு பஸ் சென்றது. அப்போது அந்த பஸ்சை, அந்த ஒற்றை காட்டுயானை வழிமறித்து பஸ் மீது மோதி கண்ணாடிகளை உடைத்தது. பின்னர் பஸ் டிரைவர் சாதுர்யமாக செயல்பட்டு பஸ்சை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பின்னோக்கி ஓட்டி வந்து பயணிகளை காப்பாற்றினார்.
அதேபோல் நேற்று முன்தினமும் அந்த வழியாக ஒரு பழங்கள், காய்கறிகளை ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றுள்ளது. அந்த லாரியையும், அந்த ஒற்றை காட்டுயானை வழிமறித்து அட்டகாசத்தில் ஈடுபட்டது. பின்னர் அது லாரியில் இருந்த பழங்கள், காய்கறிகளை ருசித்து தின்றது. அதையடுத்து வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது.
இதேபோல் தொடர்ந்து அந்த காட்டுயானை அட்டகாசம் செய்து வருகிறது. அந்த வழியாக செல்லும் எந்த வாகனங்களையும், அந்த காட்டுயானை விடுவதில்லை என்று கூறப்படுகிறது.
இதுபற்றி அந்த வழியாக வாகனங்களில் செல்வோர், வனத்துறையினரிடம் புகார் தெரிவித்தனர்.
அதன்பேரில் அந்த ஒற்றை காட்டுயானையை, கும்கி யானைகளின் உதவியுடன் பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

Related Tags :
Next Story