மறைமலைநகர் அருகே கோவிலில் பித்தளை பொருட்கள் திருட்டு; 2 வாலிபர்கள் கைது

கோவிலின் பூட்டை உடைத்து நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கோவிலில் இருந்த பித்தளை காமாட்சி விளக்கு, மணி, தாம்பாளத் தட்டு உள்பட பூஜை பொருட்களை திருடிச் சென்றனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் மறைமலைநகர் அடுத்த களிவந்தப்பட்டு கிராமத்தில் செங்கேணி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூட்டை உடைத்து நேற்று முன்தினம் மர்ம நபர்கள் கோவிலில் இருந்த பித்தளை காமாட்சி விளக்கு, மணி, தாம்பாளத் தட்டு உள்பட பூஜை பொருட்களை திருடிச் சென்றனர்.
இதுகுறித்து கோவில் நிர்வாகி மறைமலைநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இது தொடர்பாக நல்லம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ஆனந்தன் (வயது 26), சின்னதம்பி (29) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் தாய் மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (56). இவர் நேற்று முன்தினம் இரவு 3 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் ஒரு பவுன் மோதிரத்தை கட்டில் அடியில் வைத்துவிட்டு தூங்கினார்.
காலையில் எழுந்து பார்த்தபோது, கட்டிலின் அடியில் வைத்திருந்த நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து சங்கர் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story