திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை கற்பழித்த டி.வி. நடிகர் கைது


திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை கற்பழித்த டி.வி. நடிகர் கைது
x
தினத்தந்தி 7 May 2019 5:15 AM IST (Updated: 7 May 2019 5:15 AM IST)
t-max-icont-min-icon

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி பெண்ணை கற்பழித்த டி.வி. நடிகரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

மும்பையை சேர்ந்த டி.வி. நடிகர் கரன் ஒபேராய். இவர், ‘ஜாசி ஜெய்சி கொய் நகின்', ‘இன்சைட் எட்ஜ்' உள்ளிட்ட டி.வி. தொடர்களில் நடித்தவர். இவருக்கு சமீபத்தில் பெண் ஒருவர் அறிமுகமானார். இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி வந்தனர்.

இந்தநிலையில், அந்த பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி, டி.வி. நடிகர் கரன் ஒபேராய் கற்பழித்து உள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அந்த பெண்ணை செல்போனில் ஆபாசமாகவும் படம் பிடித்து வைத்து இருக்கிறார்.

இந்தநிலையில், அவர் அந்த பெண்ணிடம் பணம்கேட்டு மிரட்டி வந்து உள்ளார்.

பணம் தராவிட்டால் தன்னிடம் இருக்கும் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டினார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் சம்பவம் குறித்து ஒஷிவாரா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் டி.வி. நடிகர் கரன் ஒபேராய் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

நேற்று போலீசார் அதிரடியாக அவரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். கோர்ட்டு அவரை வருகிற 9-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டது.
1 More update

Next Story