வீடு விற்பனை செய்வதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.3 கோடி மோசடி தந்தை, மகன் கைது


வீடு விற்பனை செய்வதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.3 கோடி மோசடி தந்தை, மகன் கைது
x
தினத்தந்தி 8 May 2019 4:30 AM IST (Updated: 8 May 2019 3:31 AM IST)
t-max-icont-min-icon

வீடு விற்பனை செய்வதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.3 கோடி மோசடியில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மும்பை, 

வீடு விற்பனை செய்வதாக கூறி தொழில் அதிபரிடம் ரூ.3 கோடி மோசடியில் ஈடுபட்ட தந்தை, மகன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரூ.3 கோடி வீடு

மும்பை ஒஷிவாரா பகுதியை சேர்ந்த தொழில் அதிபர் சஜித். இவருக்கு கடந்த 2014-ம் ஆண்டு குஜராத்தை சேர்ந்த ஆயுப் (வயது55) மற்றும் அவரது மகன் யாசர்(28) ஆகியோரின் அறிமுகம் கிடைத்தது. இந்தநிலையில் அவர்கள் சூரத்தில் உள்ள தங்களுக்கு சொந்தமான பங்களா வீட்டை ரூ.3 கோடிக்கு விற்பனை செய்வதாக சஜித்திடம் கூறியுள்ளனர்.

இதையடுத்து சஜித் அந்த வீட்டை வாங்குவதற்காக அவர்களிடம் ரூ.3 கோடி கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து தந்தை, மகன் இருவரும் வீட்டுக்கான ஆவணங்களை அவரிடம் கொடுத்தனர். ஆனால் வீட்டை சஜித்திடம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

தந்தை, மகன் கைது

இதனால் சந்தேகமடைந்த சஜித் இதுபற்றி விசாரித்தபோது, தந்தை மற்றும் மகன் பங்களா வீட்டை விற்பதாக போலி ஆவணங்களை தன்னிடம் கொடுத்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த சஜித் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆயுப் மற்றும் அவரது மகன் யாசரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 More update

Next Story