ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் வீடு, வீடாக சென்று பிரசாரம் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்


ஓட்டப்பிடாரம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் வீடு, வீடாக சென்று பிரசாரம் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர்
x
தினத்தந்தி 9 May 2019 3:00 AM IST (Updated: 9 May 2019 12:06 AM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் தொகுதியில் வீடு, வீடாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.

ஓட்டப்பிடாரம், 

ஓட்டப்பிடாரம் தொகுதியில் வீடு, வீடாக சென்று அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு கொடுத்தனர்.

பிரசாரம்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் தீவிர பிரசாரம் செய்து வருகிறார். அவர் நேற்று மாலையில் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் தலைமையில் கீழதட்டாப்பாறை பகுதியில் பிரசாரத்தை தொடங்கினார். தொடர்ந்து வடக்குசிலுக்கன்பட்டி, மறவன்மடம், அந்தோனியார்புரம், திரவியபுரம், கீழக்கூட்டுடன்காடு, நடுக்கூட்டுடன்காடு, சூசைபாண்டியாபுரம், புதுக்கோட்டை, சிறுப்பாடு, சவேரியார்புரம் ஆகிய கிராமங்களில் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது திரண்டு வந்த பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

பிரசாரத்தின் போது, அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:-

உறுதுணை

இந்த பகுதி மக்கள் அன்பையும் பாசத்தையும் சேர்த்து அழுத்தமாக ஆரத்தி எடுக்கிறார்கள். முதல்-அமைச்சர் இந்த பகுதியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் வழங்கப்படும் என்று உறுதி அளித்து உள்ளார். இந்த அரசு மக்களுக்கு உறுதுணையாக இருக்க கூடிய அரசாக அமைந்து உள்ளது. அ.தி.மு.க. கொடுக்கும் கட்சி. ஆகையால் உங்களுக்காக உழைக்க காத்திருக்கும் மோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று கூறினார்.

பிரசாரத்தின் போது, அ.தி.மு.க. நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

அமைச்சர் காமராஜ்

இதே போன்று மாப்பிள்ளையூரணி பகுதியில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரித்தார். அந்த பகுதியில் உள்ள வீட்டு திண்ணைகளில் அமர்ந்து பொதுமக்களுடன் உரையாடி இரட்டை இலைக்கு வாக்கு கேட்டார். அப்போது, அ.தி.மு.க. அரசு மக்களுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி ஓட்டப்பிடாரம் தொகுதியில் அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக நிறைவேற்றப்படும். தமிழகத்தில் மக்களை பாதுகாக்கும் அரசாக அ.தி.மு.க. அரசு விளங்கி வருகிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். சாதாரண முதல்வர். ஆனால் முடிவுகள் எடுப்பதில் வலிமையானவர். உறுதியாக நிற்பவர். அந்த வகையில் தான் மக்களை பாதுகாக்க பல்வேறு திட்டங்களையும் தீட்டி செயல்படுத்தி வருகிறார். ஆகையால் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
1 More update

Next Story