அகவிலைப்படியை உடனே வழங்கக்கோரி, அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - 22 இடங்களில் நடந்தது


அகவிலைப்படியை உடனே வழங்கக்கோரி, அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - 22 இடங்களில் நடந்தது
x
தினத்தந்தி 11 May 2019 4:00 AM IST (Updated: 11 May 2019 12:03 AM IST)
t-max-icont-min-icon

அகவிலைப்படியை உடனே வழங்கக்கோரி விழுப்புரம் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்கத்தினர் 22 இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்,

அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படியை உடனடியாக வழங்கக்கோரி தமிழகம் முழுவதும் நேற்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட இணை செயலாளர் அய்யனார் தலைமை தாங்கினார். வேளாண்மைத்துறை அலுவலர் சங்க நிர்வாகி பிரபாகரன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை செயலாளர் ரத்தினம், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இதில் நிர்வாகிகள் இள முருகு, தேவிகா, அன்பழகன், சசிக்குமார், ஆறுமுகம், வஜ்ரவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் அரசு ஊழியர் சங்க நிர்வாகி சரவணன் நன்றி கூறினார்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் உள்ள மற்ற 21 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பும் அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story