கோடை வெயிலின் தாக்கத்தால் ஏ.சி. மின்சார ரெயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு ஒரே மாதத்தில் ரூ.1.84 கோடி வருவாய்

கோடை வெயிலின் தாக்கத்தால் ஏ.சி. மின்சார ரெயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரிப்பு ஒரே மாதத்தில் ரூ.1.84 கோடி வருவாய்
x
தினத்தந்தி 12 May 2019 4:00 AM IST (Updated: 12 May 2019 3:06 AM IST)
t-max-icont-min-icon

கோடை வெயிலின் தாக்கத்தால் மும்பையில் ஏ.சி. மின்சார ரெயிலில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதன்மூலம் ஒரே மாதத்தில் ரூ.1 கோடியே 84 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

மும்பை,

கோடை வெயிலின் தாக்கத்தால் மும்பையில் ஏ.சி. மின்சார ரெயிலில் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதன்மூலம் ஒரே மாதத்தில் ரூ.1 கோடியே 84 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

ஏ.சி. மின்சார ரெயில்

மும்பையில் சர்ச்கேட் - விரார் இடையே கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. குறைந்த எண்ணிக்கையிலான சேவை மற்றும் அதிக கட்டணம் காரணமாக ஏ.சி. மின்சார ரெயில்களில் குறைந்த அளவில் தான் பயணிகள் பயணம் செய்கின்றனர்.

மேலும் சேவை தொடங்கி 16 மாதங்கள் ஆகி உள்ள நிலையில், ஏ.சி. மின்சார ரெயில்கள் மூலம் இதுவரை ரூ.24 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ரூ.1.84 கோடி வருவாய்

இந்தநிலையில் கோடை வெயில் காரணமாக ஏ.சி. மின்சார ரெயில்களில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.

இதுகுறித்து மேற்கு ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி ரவீந்திர பாகர் கூறுகையில், ‘‘ஏப்ரல் மாதம் ஏ.சி. மின்சார ரெயில்களில் சுமார் 4½ லட்சம் பயணிகள் பயணம் செய்து உள்ளனர். இதன்மூலம் ரூ.1 கோடியே 84 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

இதற்கு முன் டிக்கெட் விற்பனை மூலம் அதிகபட்சமாக கடந்த ஆண்டு அக்டோபரில் ரூ.1.82 கோடியும், மே மாதம் ரூ.1.68 கோடியும் வசூலாகியிருந்தது. இந்த ஆண்டும் மே மாதம் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்’’ என்றார்.
1 More update

Next Story