கள் தயாரிக்க பயன்படுத்தி வந்த ரூ.70 லட்சம் ரசாயனம் பறிமுதல் தொழிற்சாலை உரிமையாளர் கைது

நாசிக்கில், தடை செய்யப்பட்ட ரூ.70 லட்சம் மதிப்பிலான ரசாயனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
மும்பை,
நாசிக்கில், தடை செய்யப்பட்ட ரூ.70 லட்சம் மதிப்பிலான ரசாயனம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக தொழிற்சாலை உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
ஆரே காலனி
மும்பை ஆரே காலனியில் உள்ள மாட்டுத்தீவன குடோனில் சமீபத்தில் 2,200 கிலோ எடையுள்ள குளோரல் ஹைட்டேட் என்ற தடை செய்யப்பட்ட ரசாயனம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்து இருந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரசாயனம் கள் தயாரிக்க பயன்படுத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், ஆரே காலனியில் பறிமுதல் செய்யப்பட்ட ரசாயனம் நாசிக்கில் இருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
ரூ.70 லட்சம் ரசாயனம்
இதையடுத்து மும்பை போலீசார் நாசிக் சென்று ஆல்பா சோல்வன்ட் என்ற தொழிற்சாலையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3 ஆயிரத்து 500 கிலோ ரசாயனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.70 லட்சம் ஆகும்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், ரசாயனம் தயாரித்து வந்த ஆலை உரிமையாளர் திலிப் போபட்ராவ் என்பவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story






