வேலூரில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை, பணம் திருட்டு போலீஸ் நிலையம் அருகிலேயே துணிகரம்


வேலூரில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை, பணம் திருட்டு போலீஸ் நிலையம் அருகிலேயே துணிகரம்
x
தினத்தந்தி 12 May 2019 10:45 PM GMT (Updated: 13 May 2019 4:37 PM GMT)

வேலூரில் போலீஸ் நிலையம் அருகிலேயே சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை, பணத்தை திருடிச் சென்று விட்ட னர். இதுகுறித்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர், 

வேலூர் சத்துவாச்சாரி போக்குவரத்து பிரிவில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரி பவர் சண்முகம். இவர் வேலூர் வடக்கு போலீஸ் நிலையம் அருகில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த 11-ந் தேதி இவர் ஆரணியில் நடந்த உறவினர் காரியத்திற்கு சென்றிருந்தார்.

அடுத்த நாள் மாலையில் வேலூருக்கு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு திறக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் திறந்திருந்தது. அதில் வைத்திருந்த 7½ பவுன் நகை, ரூ.60 ஆயிரம் மற்றும் வெள்ளிப்பொருட்களை காணவில்லை.

சப்-இன்ஸ்பெக்டர் வெளியூர் சென்றிருப்பதை அறிந்த மர்ம நபர்கள், வீட்டுக்குள் புகுந்து நகை, பணத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் குடியிருப்பு பகுதி யில் கண்காணிப்பு கேமரா பொருத்தப் படவில்லை. இதனால் குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நகரில் பொது மக்கள் கூடும் இடங்கள், வணிக நிறுவனங்களில் கண் காணிப்பு கேமராக்கள் பொருத்த வலியுறுத்தும் காவல்துறை போலீஸ் குடி யிருப்பு பகுதியில் கண் காணிப்பு கேமரா பொருத்த வில்லை. மேலும் போலீஸ் நிலையம் அருகிலேயே சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் நகை, பணம் திருட்டுப்போன சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story