உடன்குடியில் காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது


உடன்குடியில் காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 14 May 2019 3:45 AM IST (Updated: 14 May 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

உடன்குடியில் காரில் மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 800 மதுபாட்டில்கள், அவற்றை கடத்த பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

குலசேகரன்பட்டினம்,

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி தாண்டவன்காடு சந்தைப்பகுதியில் டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வருகிறது. அந்த மதுபானக்கடையில் இருந்து மதுபாட்டில்களை சொகுசு காரில் கடத்திச் செல்வதாக குலசேகரன்பட்டினம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலவேசம் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் அட்டைப்பெட்டிகளுக்குள் மதுபாட்டில்கள் மறைத்து கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில் உடன்குடி வைத்தியலிங்கபுரத்தை சேர்ந்த செல்லையா மகன் குமார், கீழ புதுத்தெருவை சேர்ந்த அய்யப்பன் மகன் பாலாஜி என்பதும், வெளியிடங்களுக்கு விற்பனைக்காக மதுபாட்டில்களை கடத்திச் செல்வதும் தெரியவந்தது. காரில் மொத்தம் 800 மதுபாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்களுடன், காரையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story