வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த பயிற்சி
வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த பயிற்சி வகுப்பு தேர்தல் பொதுபார்வையாளர் தலைமையில் நடந்தது.
நாகப்பட்டினம்,
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 18-ந் தேதி நடைபெற்றது. வருகிற 23-ந் தேதி (வியாழக்கிழமை) வாக்குகள் எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் கண்காணிப்பாளர்கள், நுண்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோருக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு நாகை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பயிற்சிக்கு மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கான தேர்தல் பொது பார்வை யாளர் விஜய்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி முன்னிலை வகித்தார்.
வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் கண்காணிப்பாளர்கள், நுண்பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து, தேர்தல் பொது பார்வையாளர் விஜய்குமார், அலுவலர்களுக்கு விளக்கமளித்தார்.
கையேடுகள்
அதைத்தொடர்ந்து, பயிற்சியில் பங்கேற்ற அலுவலர் களுக்கு வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் அடங்கிய கையேடுகளை வழங்கினார். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செல்வராணி, தாசில்தார் (தேர்தல்) ராஜகோபாலன், அனைத்து தேர்தல் ஒருங்கிணைப்பு அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பாளர்கள், நுண்பார்வையாளர்கள், உதவியாளர்கள் உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story