பெண் போலீஸ் முன்பு ஆபாச செயலில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது


பெண் போலீஸ் முன்பு ஆபாச செயலில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது
x
தினத்தந்தி 14 May 2019 5:34 AM IST (Updated: 14 May 2019 5:34 AM IST)
t-max-icont-min-icon

பெண் போலீஸ் முன்பு ஆபாச செயலில் ஈடுபட்ட போலீஸ்காரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மும்பை,

மும்பை குர்லா கிழக்கு பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பில் பெண் போலீஸ் ஒருவர் வசித்து வருகிறார். இவரது எதிர் வீட்டில் காட்கோபர், பந்த் நகர் போலீஸ் நிலையத்தில் வேலை பார்க்கும் போலீஸ்காரர் ஹரிசந்திரா (வயது41) என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு 11 மணியளவில் பெண் போலீஸ் அவரது வீட்டின் பால்கனியில் நின்றுகொண்டிருந்தார்.

அப்போது பக்கத்து வீட்டு பால்கனியில் நின்றுகொண்டிருந்த போலீஸ்காரர் ஹரிசந்திரா திடீரென ஆடைகளை கழற்றி பெண் போலீஸ் முன்பு ஆபாச செயலில் ஈடுபட்டார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பெண் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்தார். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று புகார் அளித்தார்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த நேருநகர் போலீசார், பெண் போலீஸ் முன்பு ஆபாச செயலில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஹரிசந்திராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story