மும்பை மாநகராட்சி கமிஷனராக பிரவீன் பர்தேஷி பதவி ஏற்றார் ‘சாக்கடையை தூர்வார முன்னுரிமை அளிப்பேன்’
மும்பை மாநகராட்சி கமிஷனராக பிரவீன் பர்தேஷி நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். சாக்கடைகளை தூர்வார முன்னுரிமை அளிப்பதாக தெரிவித்தார்.
மும்பை,
மும்பை மாநகராட்சி கமிஷனராக இருந்த அஜாய் மேத்தா மாநில அரசின் தலைமை செயலாளராக நியமிக்கப்பட்டார். இதனால் காலியான மும்பை மாநகராட்சி கமிஷனர் பதவிக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரவீன் பர்தேஷி நியமிக்கப்பட்டார். அவர் நேற்று மும்பை மாநகராட்சி கமிஷனராக பதவி ஏற்றுக்கொண்டார்.
அவரிடம் அஜாய் மேத்தா பொறுப்புகளை ஒப்படைத்தார். மேலும் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். தற்போது, நகரில் மேற்ெகாண்டு வரும் சாக்கடை தூர்வாரும் பணிகள் குறித்த விவரங்களையும் அவரிடம் தெரிவித்தார்.
பின்னர் நிருபர்களை சந்தித்த புதிய மாநகராட்சி கமிஷனர் பிரவீன் பர்தேஷி கூறுகையில், ‘மழையின் போது மும்பைவாசிகளின் இயல்பு வாழ்க்கை பாதித்து விடாமல் இருப்பதற்காக சாக்கடை தூர்வாரும் பணிக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்.
எனவே மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே சாக்கடைகளை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மழைநீர் தேங்கும் இடங்கள் எனக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளேன், என்றார்.

Related Tags :
Next Story