மாவட்ட செய்திகள்

ராஜபாளையம் அருகே வரதட்சணை கொடுமை; தொழிலாளி கைது + "||" + Dowry harassment; Worker arrested

ராஜபாளையம் அருகே வரதட்சணை கொடுமை; தொழிலாளி கைது

ராஜபாளையம் அருகே வரதட்சணை கொடுமை; தொழிலாளி கைது
வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கொடுமைப்படுத்தியதாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே உள்ள கொத்தங்குளம் தெற்கு தெருவை சேர்ந்த அர்ச்சுனன் என்பவரது மகள் செல்வி (வயது23). சேத்தூர் காமராஜர் நகரை சேர்ந்த ஜோசப் என்பவரது மகன் ஸ்டாலின்ராஜ் (29). இவர்களுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஸ்டாலின்ராஜ் கூலி வேலை செய்து வருகிறார்.


திருமணத்தின் போது பெண் வீட்டார் சார்பில் 10 பவுன் நகைகள், ரூ.50ஆயிரம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருவரும் கூட்டுக்குடும்பமாக வாழ்க்கை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் கணவர் தன்னை வெறுத்து ஒதுக்கி வருவதாகவும், கணவரும் குடும்பத்தாரும் கூடுதல் வரதட்சணை கேட்டு தன்னை கொடுமைப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து வந்ததாகவும், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செல்வி புகார் அளித்தார்.

அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மீனா வழக்குப்பதிவு செய்து ஸ்டாலின்ராஜை கைது செய்து விசாரித்து வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

1. சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்; தொழிலாளி கைது
காரைக்கால் அருகே சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
2. கூடலூரில் பயங்கரம், மருமகனை குத்திக் கொன்ற தொழிலாளி கைது - மகள் தற்கொலை செய்ததால் ஆத்திரம்
கூடலூரில் மருமகனை கத்தியால் குத்தி கொன்ற தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
3. வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை: கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை - தூத்துக்குடி மகிளா கோர்ட்டு தீர்ப்பு
வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக அவருடைய கணவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி மகிளா கோர்ட்டு உத்தரவிட்டது.
4. வரதட்சணை கேட்டு கொடுமை, தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை - கணவர் மீது வழக்கு
வருசநாடு அருகே தூக்குப்போட்டு கர்ப்பிணி தற்கொலை செய்து கொண்டார். அவரிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியதாக கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
5. திருவாரூரில், வரதட்சணை கொடுமையால், நகைக்கடை உரிமையாளர் மனைவி தீக்குளிப்பு
திருவாரூரில் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக நகை கடை உரிமையாளர் மனைவி தீக்குளித்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள அவர், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.