தொழிலாளியை கட்டையால் அடித்து கொன்ற வாலிபர் கைது


தொழிலாளியை கட்டையால் அடித்து கொன்ற வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 May 2019 2:00 AM IST (Updated: 15 May 2019 4:05 PM IST)
t-max-icont-min-icon

சோளிங்கர் அருகே தொழிலாளியை கட்டையால் அடித்து கொன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.

சோளிங்கர், 

சோளிங்கரை அடுத்த ஐப்பேடு மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 45), தொழிலாளி. இவருடைய மனைவி முனிலட்சுமி (40). இவர்களுக்கு அனிதா (5) என்ற மகள் உள்ளார். ஆறுமுகத்துக்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு முடக்கு வாதம் வந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் அவர் வீட்டு கட்டிலில் படுத்தபடியே முடக்கு வாதத்துக்கான சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை முனிலட்சுமி, அனிதா வெளியே சென்றிருந்தனர். அப்போது வீட்டிற்கு வந்த அதே ஊரை சேர்ந்த குமார் (27) என்ற வாலிபர் கட்டையால் கட்டிலில் படுத்திருந்த ஆறுமுகத்தை சரமாரியாக அடித்தார். இதில், அவர் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து குமார் அங்கிருந்து தப்பியோடினார்.

இதுகுறித்து சோளிங்கர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய குமாரை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று குமார் கைது செய்யப்பட்டார்.


Next Story