அன்னதான கூடம் மூடப்பட்டதை கண்டித்து சதுரகிரி கோவிலுக்கு பூஜை பொருள் கொண்டு செல்லும் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் பகுதியில் அன்னதான கூடங்கள் மூடப்பட்டதை கண்டித்து சுமைதூக்கும் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு அருகே உள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில். இந்த கோவில் தரை மட்டத்திலிருந்து சுமார் 4,500 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷத்தையொட்டி மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
தற்போது கோவில் பகுதியில் செயல்பட்டு வந்த அன்னதான கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் பக்தர்கள் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோவில் மற்றும் கடைகளுக்கு எந்த ஒரு பொருளையும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் மூலமே கொண்டு செல்லப்படுகிறது.
கோவில் பகுதியில் செயல்பட்டு வந்த அன்னதான கூடங்கள் மூடப்பட்டுள்ளதால் உணவுப்பொருட்கள் கொண்டு செல்லப்படுவதில்லை. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி சுமை தூக்கும் தொழிலாளர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அன்னதான கூடங்கள் மூடப்பட்டதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள தொழிலாளர்கள் மலை அடிவாரத்தில் திரண்டு அன்னதான கூடங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து கோஷங்களை எழுப்பினர். பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படும் நிலையில் கோவிலுக்கு பூஜை பொருட்கள் கொண்டு செல்ல முடியாத நிலை உருவாகி கோவில் நிர்வாகம் தவித்து வருகிறது. மேலும் கடை உரிமையாளர்களும் பொருட்களை கொண்டு செல்ல முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Tags :
Next Story