குமரியில் சுட்டெரிக்கும் கோடை வெயில்: முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் 19 அடியாக குறைந்தது
குமரியில் கோடை வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் முக்கடல் அணை நீர்மட்டம் மைனஸ் 19 அடியாக குறைந்தது.
நாகர்கோவில்,
பூதப்பாண்டி அருகே முக்கடல் அணை உள்ளது. இந்த அணை முழுக்க, முழுக்க குடிநீருக்காக கட்டப்பட்டதாகும். நாகர்கோவில் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையை இந்த அணை தான் பூர்த்தி செய்து வருகிறது. மேலும் வழியோர கிராம மக்களும், சுசீந்திரம், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் இந்த அணையால் பயன்பெற்று வருகிறார்கள்.
இந்த அணையின் நீர் கொள்ளளவு 25 அடியாகும். இந்த அணை முழுமையாக வறண்டாலும் 25 அடிக்கு கீழே மைனஸ் அளவில் 20 அடி வரை குடிநீருக்காக தண்ணீர் எடுக்க முடியும் என்பது இந்த அணையின் சிறப்பு அம்சமாகும். இந்த ஆண்டு போதிய அளவு மழை பெய்யாததாலும், வழக்கத்தை விட இந்த ஆண்டு கோடை வெயில் கடுமையாக வறுத்தெடுப்பதாலும் கடந்த சில நாட்களாக அணையின் நீர்மட்டம் சரசரவென குறைந்தது.
கோடை காலத்தை சமாளிக்கும் விதமாக கலெக்டர் உத்தரவின்பேரில் குடிநீருக்காக பேச்சிப்பாறை அணையில் இருந்து முக்கடல் அணைக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.
நாளுக்கு நாள் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் மேலும் குறைந்தது. இந்தநிலையில் முக்கடல் அணையின் நீர்மட்டம் பிளஸ் அளவில் இருந்த தண்ணீர் முழுமையும் வற்றி மைனஸ் அளவுக்கு சென்றுள்ளது. நேற்றைய நிலவரப்படி இந்த அணையின் நீர்மட்டம் மைனஸ் 19 அடியாக இருந்தது.
கத்திரி வெயில் வருகிற 29-ந் தேதி தான் நிறைவடைகிறது. அதற்குள் முக்கடல் அணையின் நீர்மட்டம் மேலும் பல அடி குறையும் என்றும், எனினும் மழை வந்து விட்டால் தண்ணீர் பிரச்சினை ஏற்படாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குமரி மாவட்ட பாசனத்துக்கு பயன்படும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றார்-1, சிற்றார்-2 ஆகிய 4 அணைகளிலும் போதிய தண்ணீர் இல்லாததால் கன்னிப்பூ சாகுபடி தப்புமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. எனவே விவசாயிகளும், பொதுப்பணித்துறை மற்றும் வேளாண்மைத்துறை அதிகாரிகளும் மழை எப்போது பெய்யும்? என்ற எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர்.

Related Tags :
Next Story