குடிநீர் திருட்டில் ஈடுபட்டால் ரூ. 1 கோடி அபராதம் - அதிகாரி எச்சரிக்கை
குடிநீர் திருட்டில் ஈடுபட்டால் ரூ. 1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதுகுளத்தூர்,
முதுகுளத்தூர்-பரமக்குடி நெடுஞ்சாலையில் சோனை மீனாள் கல்லூரி எதிரே மலர் செடிகள் விற்பனை செய்யும் நர்சரி கார்டன் உள்ளது. இங்கு செடிகள் வளர்ப்பதற்கு காவிரி குடிநீர் இணைப்பில் இருந்து அனுமதியின்றி இணைப்பு எடுத்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கண்காணிப்பு குழுவினர் அந்த இணைப்பை அகற்றினர்.
இதேபோல 10 இடங்களில் அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் குழுவினர் அகற்றினர். மேலும் கண்காணிப்பு என்ஜினீயர் ரமேஷ்பாபு, நிர்வாக என்ஜினீயர் அய்யணன், உதவி நிர்வாக என்ஜினீயர் சண்முக நாதன்,உதவி என்ஜினீயர் பாலசுப்பிரமணி, பேரூராட்சி நிர்வாக அதிகாரி மாலதி ஆகியோர் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது குடிநீர் குழாய்களில் திருட்டுத்தனமாக இணைப்பு ஏற்படுத்துதல், குடிநீர் திருட்டில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்று நிர்வாக என்ஜினீயர் அய்யணன் எச்சரித்தார்.
Related Tags :
Next Story