பாங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.75 லட்சம் தங்கம் பறிமுதல் ஒருவர் கைது


பாங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.75 லட்சம் தங்கம் பறிமுதல் ஒருவர் கைது
x
தினத்தந்தி 17 May 2019 10:45 PM GMT (Updated: 17 May 2019 8:47 PM GMT)

பாங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் கடத்திய ரூ.75 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக ஒருவரை அதிகாரிகள் கைது செய்தனர்.

பெங்களூரு,

பாங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அதிகாரிகள் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, பாங்காக்கில் இருந்து பெங்களூருவுக்கு விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது சந்தேகத்தின் அடிப்படையில் பெங்களூரு ஆடுகோடியில் வசித்து வரும் ஆரீப் உசேன் (வயது 55) என்பவரை பிடித்து அதிகாரிகள் சோதனையிட்டனர். இந்த சோதனையின்போது ஆரீப் உசேன் தனது பையில் 3 தங்க கட்டிகளை பதுக்கி வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஆரீப் உசேனை அதிகாரிகள் கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில் கைதான ஆரீப் உசேனுக்கு தங்கம் கடத்தல் கும்பலை சேர்ந்த பலருடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

கைதான ஆரீப் உசேனிடம் இருந்து 2 கிலோ 250 கிராம் எடை கொண்ட தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.75 லட்சம் இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விமானத்தில் தங்கம் கடத்தி வந்ததாக ஆரீப் உசேனை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Next Story