கடற்கரை காந்தி சிலையில் கல் தூண்கள் சீரமைப்பு பணி தீவிரம்


கடற்கரை காந்தி சிலையில் கல் தூண்கள் சீரமைப்பு பணி தீவிரம்
x
தினத்தந்தி 18 May 2019 11:00 PM GMT (Updated: 18 May 2019 8:08 PM GMT)

புதுவை கடற்கரை காந்தி சிலையை சுற்றியுள்ள கல் தூண்கள் சீரமைப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

புதுச்சேரி, 

புதுச்சேரியின் அடையாளமாக கடற்கரையில் அமைந்துள்ள காந்தி சிலையை பல்வேறு திரைப்படங்களில் காட்டுவார்கள். அந்த சிலையின் பின்புறமும், பக்கவாட்டிலும் கல் தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. பல்வேறு சிற்பங்களுடன் சுமார் 30 அடி உயரமுள்ள இந்த தூண்கள் கம்பீரமாக நிற்கின்றன. இவை நிறுவப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இந்த தூண்களின் மேல் பகுதியில் சேதம் ஏற்பட்டுள்ளது. தூணின் மேல் பகுதியில் உள்ள இணைப்புகளில் வெடிப்புகளும் ஏற்பட்டன.

இதன் காரணமாக தூணின் மேல் பகுதி கீழே விழுந்து சேதம் ஏற்படுத்தும் வாய்ப்பு உருவானது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் அதனை ஆய்வு செய்தனர். அப்போது தூணின் உறுதிதன்மையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து அந்த தூண்களை சுற்றிலும் இரும்பு சாரங்கள் அமைக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன. நேற்று ராட்சத கிரேன் உதவியுடன் தூணின் மேல் இருந்த பகுதி சிமெண்டு மற்றும் ரசாயன கலவைகள் பூசப்பட்டு வலுவூட்டப்பட்டது.

Next Story