மாவட்ட செய்திகள்

ஆற்றில் மீட்கப்பட்ட ஆதார் அட்டைகள் பெங்களூரு நிறுவனத்திடம் ஒப்படைப்பு வீசியது யார்? போலீசார் விசாரணை + "||" + Who handed back the Aadhaar cards to the Bangalore Company? Police investigation

ஆற்றில் மீட்கப்பட்ட ஆதார் அட்டைகள் பெங்களூரு நிறுவனத்திடம் ஒப்படைப்பு வீசியது யார்? போலீசார் விசாரணை

ஆற்றில் மீட்கப்பட்ட ஆதார் அட்டைகள் பெங்களூரு நிறுவனத்திடம் ஒப்படைப்பு வீசியது யார்? போலீசார் விசாரணை
திருத்துறைப்பூண்டி அருகே ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட ஆதார் அட்டைகள் பெங்களூரு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டன. ஆற்றில் வீசியது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்துறைப்பூண்டி,

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கட்டிமேடு, எல்லைநாகலடி கோட்டகம் பகுதி ஆற்றங்கரை தெரு அருகில் முள்ளியாற்றில் கடந்த 16-ந்தேதி ஆதார் அட்டைகள் கிடந்ததை பார்த்த பொதுமக்கள், வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். கட்டிமேடு, ஆதிரெங்கம், சேகல் உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களுக்கு அஞ்சலகம் மூலம் வழங்க வேண்டிய ஆதார் அட்டைகள் இங்கு கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் அந்த பகுதி பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்து தங்களது ஆதார் அட்டைகளை எடுத்து சென்றனர்.


இதுகுறித்து பொதுமக்கள் தாசில்தார் ராஜன்பாபுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உத்தரவின்பேரில் கிராம நிர்வாக அலுவலர் அப்பாஸ்மந்திரி திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து வருவாய்த்துறையினரிடம் ஆதார் அட்டைகளை முகவரியுடன் எண்ணி ஒப்படைத்த பிறகு விசாரணை தொடங்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.

பின்னர் வருவாய்த்துறையினர் கட்டிமேடு, ஆதிரெங்கம், சேகல் போன்ற கிராமங்களில் உள்ளவர்களுக்கு வழங்க வேண்டிய 1,175 ஆதார் அட்டைகளை எண்ணி போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் ஆதார் அட்டைகளை பெங்களூருவில் உள்ள உதய் நிறுவன தொழில்நுட்ப அலுவலர் கார்த்தியிடம், போலீசார் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் ஆதார் அட்டைகளை ஆற்றில் வீசியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை