மாவட்ட செய்திகள்

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் சலவைத் தொழில் பாதிப்பு + "||" + in Chennai Water shortage Laundry industry impact

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் சலவைத் தொழில் பாதிப்பு

சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் சலவைத் தொழில் பாதிப்பு
சென்னையில் தண்ணீர் தட்டுப்பாட்டால் சலவைத் தொழில் பாதிப்படைந்து வருகிறது.
சென்னை,

சென்னையில் கோடைக்காலம் தொடங்கியதில் இருந்தே தண்ணீர் தட்டுப்பாடு மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. வீடுகளில் உள்ள குழாய்களில் தண்ணீர் வராததால், குழாயடியை தேடி காலிக் குடங்களுடன் செல்வதே மக்களின் வாடிக்கையாகி வருகிறது. இப்போதுள்ள சூழ்நிலையில் குடிநீர் லாரிகள் தான் பெரும்பாலான மக்களுக்கு கடவுளாகவே காட்சி தருகின்றன.


அந்தளவு குடிநீர் தட்டுப்பாடு தற்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதனால் குடிநீரை மூலாதாரமாக கொண்ட தொழில்கள் சரிவை சந்தித்து வருகின்றன. குறிப்பாக சலவைத் தொழில் பெரும்பாதிப்பை சந்தித்து வருகிறது.

சென்னை சேத்துப்பட்டில் உள்ள மாநகராட்சி சலவை கூடத்துக்கு சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், அமைந்தகரை, கீழ்ப்பாக்கம், அண்ணாநகர், கோடம்பாக்கம், வடபழனி, அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இருந்து துணிகள் கொண்டு வரப்படுகின்றன. ஆஸ்பத்திரிகள், ஓட்டல்கள், பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து வரும் துணிகள் இங்கு சலவை செய்யப்படுகின்றன. இந்த சலவை பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக இந்த சலவை கூடத்தில் பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளன. போதுமான தண்ணீர் கிடைக்காததால் சலவைக்கு துணிகள் வாங்க தொழிலாளர்கள் தயங்குகிறார்கள்.

இதுகுறித்து சென்னை ரஜக யுவஜன சலவையாளர்கள் சங்கத் தலைவர் ஜி.விஷ்ணுராம் கூறுகையில், “தற்போது மாநகராட்சி அமைத்து 3 ஆழ்துளை கிணறுகள் மூலம் வரும் தண்ணீரின் அளவும் குறைந்துவிட்டது. அடிபம்பு குழாய்களிலும் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருகிறது. இதனால் வாங்கும் துணிகளின் அளவை 50 சதவீதம் குறைத்துவிட்டோம். இதனால் வருமானமும் பாதிக்கிறது. எனவே எங்களுக்கு தினமும் தண்ணீர் வழங்க மாநகராட்சி நடவடிக்கை எடுக்கவேண்டும்”, என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் மனைவியை தாக்கிய டி.வி. நடிகர் கைது - பரபரப்பு தகவல்கள்
சென்னை திருவான்மியூரில் மனைவியை தாக்கியதாக டி.வி. நடிகர் கைது செய்யப்பட்டார்.
2. சென்னையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் புதிய கோவில் கட்டப்படும் தேவஸ்தான தலைவர் பேட்டி
திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னையில் புதிய கோவில் கட்டப்படும் என தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்தார்.
3. சென்னையில், அரசு பஸ்-கன்டெய்னர் லாரி மோதல்; கண்டக்டர் பலி 13 பேர் படுகாயம்
சென்னை பாடி அருகே அதிகாலையில் கன்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதிய பயங்கர விபத்தில், பஸ் கண்டக்டர் பலியானார். டிரைவர் உள்பட 13 பேர் படுகாயம் அடைந்தனர்.
4. சென்னையில், குடிநீர் வாரிய பெண் என்ஜினீயர் கைது
சென்னையில் குடிநீர் வாரிய பெண் என்ஜினீயர் கைது. ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக சிக்கினார்.
5. 67 தீ விபத்துகள்: சென்னையில், பட்டாசு வெடித்ததில் 85 பேர் காயம் சிறுவனின் கண்பார்வை பறிபோனது
சென்னையில் நேற்று 67 தீ விபத்துகள் ஏற்பட்டுள்ளது. பட்டாசு வெடித்ததில் 85 பேர் காயம் அடைந்துள்ளனர். அதில் ஒரு சிறுவனுக்கு கண்பார்வை பறிபோனது.