மாவட்ட செய்திகள்

பா.ஜனதாவுக்கு ஆதரவாக கருத்து கணிப்பு தயாரிப்பு : முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு + "||" + In favor of BJP Poll Preparation: Kumarasamy's allegation

பா.ஜனதாவுக்கு ஆதரவாக கருத்து கணிப்பு தயாரிப்பு : முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு

பா.ஜனதாவுக்கு ஆதரவாக கருத்து கணிப்பு தயாரிப்பு : முதல்-மந்திரி குமாரசாமி குற்றச்சாட்டு
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு பா.ஜனதாவுக்கு ஆதரவாக தயாரிக்கப்பட்டு உள்ளது என்று முதல்-மந்திரி குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
பெங்களூரு, 

மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்பாட்டில் நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்து உள்ளார். நாடாளுமன்றத்துக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்து உள்ளது.

நாடாளுமன்றத்துக்கான இறுதிகட்ட தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. அன்று மாலை 7 மணிக்கு பிறகு தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின.

இதில் பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகள் ஆளும் பாரதீய ஜனதா கூட்டணிக்கு ஆதரவாக இருந்தன. அதாவது பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை என்ற நிலையில் அதற்கும் அதிகமான இடங்களை பாரதீய ஜனதா கூட்டணி பிடிக்கும் என்று வெளியானது. இந்த நிலையில் தேர்தல் கருத்து கணிப்புகள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

முதல்-மந்திரி குமாரசாமி தேர்தல் கருத்து கணிப்புகள் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ச்சியாக கருத்துக்களை பதிவிட்டு உள்ளார். அவர் கூறி இருப்பதாவது:-

“தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவாக செயற்கையாக தயாரிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிவு 23-ந் தேதி வெளியாக உள்ள நிலையில் தங்களுக்கு தேவையான இடங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டால் அதனை நிரப்பும் முயற்சியாக மோடி அலை இருப்பதுபோல் ஒரு பொய்யான ேதாற்றத்தை உருவாக்க கருத்து கணிப்பு உருவாக்கப்பட்டு உள்ளது. அதன் மூலம் பிராந்திய கட்சிகளை முன்கூட்டியே தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியே இது.

அனைத்து எதிர்க்கட்சிகளும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்பாடு குறித்து தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்து உள்ளன. இதற்காக சுப்ரீம் கோர்ட்டின் கதவுகளையும் தட்டியுள் ளன. மீண்டும் வாக்குசீட்டு முறையை அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்பு உள்ளது என்பதையே இந்த கருத்து கணிப்புகள் பிரதிபலிக்கின்றன.

இது ஒரு கருத்து கணிப்புதான். உண்மையான முடிவு அல்ல.”

இவ்வாறு குமாரசாமி கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. எச்.விஸ்வநாத் விலைபோனது அனைவருக்கும் தெரியும் - குமாரசாமி பேட்டி
சாமுண்டீஸ்வரி கோவிலில் அரங்கேறிய நாடகம் தேவையற்றது என்றும், எச்.விஸ்வநாத் விலைபோனது அனைவருக்கும் தெரியும் என்றும் குமாரசாமி கூறினார்.
2. சி.பி.ஐ. விசாரணையை கண்டு பயப்படவில்லை; முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி
தொலைபேசி ஒட்டுகேட்பு விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணையை கண்டு பயப்படவில்லை என்று குமாரசாமி கூறினார்.
3. கர்நாடகத்தில் புதிய அரசியல் நாடகங்கள் அரங்கேறும்; குமாரசாமி கணிப்பு
சட்டசபை இடைத்தேர்தல் முடிவு வெளியான பிறகு கர்நாடகத்தில் புதிய அரசியல் நாடகம் அரங்கேறும் என்று குமாரசாமி கூறினார்.
4. 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்: ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் பட்டியல் 2 நாளில் வெளியீடு
15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜனதாதளம்(எஸ்) வேட்பாளர் பட்டியல் 2 நாளில் வெளியிடப்படும் என்று குமாரசாமி கூறினார்.
5. எதிர்க்கட்சி தலைவர்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சி; குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டு
எதிர்க்கட்சி தலைவர்களை ஒழிக்க மத்திய அரசு முயற்சி செய்வதாக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார்.