காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு


காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ்காந்தி நினைவு தினம் அனுசரிப்பு
x
தினத்தந்தி 22 May 2019 4:00 AM IST (Updated: 22 May 2019 2:32 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் கட்சி சார்பில் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ராஜீவ்காந்தி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி தர்மபுரியில் உள்ள காமராஜர் சிலைஅருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு தலைமை தாங்கி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை வாசித்தார். காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதி ராமசுகந்தன் முன்னிலை வகித்தார்.

இதில் முன்னாள் மாவட்ட தலைவர்கள் பாலகிருஷ்ணன், இளங்கோவன், ராஜாராம் வர்மா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் பாடி நாகராஜன், சித்தையன், நகர தலைவர் செந்தில்குமார் மற்றும் வட்டார தலைவர்கள், சார்பு அமைப்பு நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார்கள். பின்னர் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

பாப்பாரப்பட்டி

இதேபோன்று தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும் ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மாவட்ட தலைவர் தலைமையில் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள். பாப்பாரப்பட்டியில் நடந்த நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவர் சமதர்மம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் வட்டதலைவர் சண்முகம், மாவட்ட செயலாளர் இளங்கோ, மாவட்டபொருளாளர் கஸ்தூரிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். அஞ்சலி நிகழ்ச்சியில் முன்னாள் வட்டார தலைவர் கிருஷ்ணன், கட்சி நிர்வாகிகள் சண்முகம், குமரவேல், மணி, சக்திவேல், ராமகிருஷ்ணன், கந்தன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

ஓசூர்

கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், ராஜீவ் காந்தி நினைவு தினம் ஓசூரில் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி, ஓசூரிலுள்ள மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் ராஜீவ்காந்தி உருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர், தீவிரவாத உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளுக்கு, மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன் தலைமை தாங்கினார். ஓசூர் நகர தலைவர் நீலகண்டன் முன்னிலை வகித்தார். இதில் ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. கே.கோபிநாத் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிகளில், விவசாய அணி மாவட்ட தலைவர் சூரியகணேஷ், வட்டார தலைவர் சீனிவாச ரெட்டி, மாவட்ட மகளிர் அணி தலைவி சரோஜம்மா, துணை தலைவி லட்சுமி, மாவட்ட எஸ்.சி. பிரிவு தலைவர் கொத்தூர் முனிராஜ், பொருளாளர் மாதேஷ், கீர்த்திகணேஷ், மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

ஊத்தங்கரை

ஊத்தங்கரையில் ராஜீவ்காந்தி நினைவு தினம் வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சார்பில் கடைபிடிக்கப்பட்டது. இதற்கு வடக்கு வட்டார தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். நகர தலைவர் விஜயகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் பூபதி, ராமச்சந்திரன், குப்புசாமி, சொக்கலிங்கம், அண்ணாதுரை, நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியை முன்னிட்டு ஊத்தங்கரை 4 ரோடு சந்திப்பில் உள்ள ராஜீவ்காந்தி சிலைக்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள். இதில் நிர்வாகிகள் கோவிந்தசாமி, திருமால், ராமு, சின்னசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story