கன்டெய்னர் லாரியை கடத்தி ரூ.1½ கோடி செம்பு கம்பி கொள்ளை : 6 பேர் கும்பல் கைது


கன்டெய்னர் லாரியை கடத்தி ரூ.1½ கோடி செம்பு கம்பி கொள்ளை : 6 பேர் கும்பல் கைது
x
தினத்தந்தி 22 May 2019 12:06 AM GMT (Updated: 22 May 2019 12:06 AM GMT)

நவிமும்பையில் கன்டெய்னர் லாரியை கடத்தி ரூ.1½ கோடி மதிப்பிலான செம்பு கம்பிகளை கொள்ளையடித்த 6 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

மும்பை, 

நவிமும்பை உரன் பகுதியில் இருந்து சில்வாசா நோக்கி சம்பவத்தன்று கன்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. கன்டெய்னரில் ரூ.1½ கோடி மதிப்பிலான 25 டன் செம்பு (காப்பர்) கம்பிகள் இருந்தது. கவான் பாடா- பேலாப்பூர் ரெட்டிபந்தர் இடையே சென்று கொண்டு இருந்தபோது, காரில் வந்த கும்பல் கண்டெய்னர் லாரியை வழிமறித்தது.

பின்னர் அந்த கும்பல் லாரி டிரைவரை தாக்கி கீழே தள்ளிவிட்டு, கன்டெய்னர் லாரியை கடத்திச்சென்றது. பின்னர் 25 டன் செம்பு கம்பிகளை கொள்ளையடித்துவிட்டு தப்பிச்சென்றது.

இந்த சம்பவம் குறித்த புகாரின்பேரில் நவிமும்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கொள்ளை கும்பலை சேர்ந்த 6 பேரை கைது செய்து உள்ளனர்.

கைது செய்யப்பட்ட 6 பேரையும் வருகிற 26-ந் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தப்படும் என நவிமும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் குமார் கூறினார். 

Next Story