அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி பயில விண்ணப்பிக்கலாம்
தாய் மற்றும் தந்தை இல்லாத குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள், ஆயுள் கைதிகள் ஆகியோரின் பெண் குழந்தைகள் இந்த காப்பகத்தில் தங்கி கல்வி பயிலலாம்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமா மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுக்கோட்டை மாவட்டம், அன்னை சத்யா அரசு குழந்தைகள் காப்பகத்தில் தங்கி கல்வி பயில விரும்பும் தந்தையை இழந்தோ, தாயை இழந்தோ அல்லது தாய் மற்றும் தந்தை இல்லாத குழந்தைகள், மனநலம் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குழந்தைகள், ஆயுள் கைதிகள் ஆகியோரின் பெண் குழந்தைகள் இந்த காப்பகத்தில் தங்கி கல்வி பயிலலாம். இவ்வாறு தங்கி பயிலுவதற்கான விண்ணப்பங்கள் மற்றும் அனைத்து விவரங்களையும் சின்னப்பா நகர் 3-வது வீதியில் அமைந்து உள்ள அரசு குழந்தைகள் காப்பகம் என்ற முகவரியில் தொடர்பு கொண்டு விண்ணப்பங்கள் பெற்று கொள்ளலாம். மேலும் விண்ணப்பத்துடன் தாசில்தாரிடம் இருந்து பெற்ற ஆண்டு குடும்ப வருமானம் ரூ.24 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். வருகிற ஜூலை மாதம் 31-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட உள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலகத்தின் 04322 222270 என்ற எண்ணிலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தின் 04322 221266 என்ற எண்ணிலும், குழந்தைகள் நலக் குழு அலுவலகத்தின் 04322 266492 என்ற எண்ணிலும், அரசு குழந்தைகள் காப்பகம் அலுவலகத்தின் 04332 266988 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Tags :
Next Story