திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடக்கம் பாதுகாப்புக்காக ஆயிரம் போலீசார் குவிப்பு
திருச்சி நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பாதுகாப்புக்காக ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
திருச்சி,
திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு செய்யப்பட்ட மின்னணு எந்திரங்கள் அதனுடன் இணைக்கப்பட்ட கட்டுப்பாட்டு கருவிகள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிவிக்கும் ஒப்புகை சீட்டு எந்திரம் (விவிபாட்) ஆகியவை வாக்கு எண்ணிக்கை மையமான சாரநாதன் பொறியியல் கல்லூரிக்கு கொண்டு சென்று, அங்குள்ள அறைகளில் வைக்கப்பட்டன. இந்த அறைகளை சுற்றி துணை ராணுவ படையினர், திருச்சி மாநகர போலீசார், ஆயுதப்படை போலீசார் என 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த மாதம் 19-ந் தேதியில் இருந்து இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்கிறது.
இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதையொட்டி வாக்கு எண்ணப்படும் அறைகள், அங்கு போடப்பட்டுள்ள மேஜைகள், தேர்தல் நடத்தும் அதிகாரி, உதவி தேர்தல் அதிகாரிகள் அமரும் இடம், வேட்பாளர்கள் அமர்வதற்கான இடம், அவர்களது முகவர்கள் நிற்பதற்கான இடம் ஆகியவற்றை நாடாளுமன்ற தேர்தல் பொது பார்வையாளர் அமித்குமார், திருச்சி மாவட்ட கலெக்டரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான சிவராசு ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
வாக்கு எண்ணிக்கை மையங்களில் தலா 14 மேஜைகள் போடப்பட்டு உள்ளன. ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு நுண் பார்வையாளர், கண்காணிப்பு அலுவலர், உதவியாளர் என 3 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு வாக்கு எண்ணுவது எப்படி என்பது பற்றி ஏற்கனவே பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் பணியில் 288 மத்திய, மாநில அரசு ஊழியர்கள் ஈடுபடுகிறார்கள். இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும்.
தபால் வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்டதும் பாதுகாப்பு அறையில் இருந்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரிசையாக கொண்டு வரப்பட்டு மேஜைகளில் வைக்கப்படும். ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குகளை ஊழியர்கள் வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் எண்ணி உதவி தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் ஒப்படைப்பார்கள். அவர்கள், 14 மேஜைகளிலும் எண்ணி முடிக்கப்பட்டதும் சுற்று வாரியாக முடிவுகளை ஒலிபெருக்கியில் அறிவிப்பார்கள். மேலும் அறிவிப்பு பலகையிலும் எழுதுவார்கள்.
முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின்போது வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம் காலை 10 அணி அளவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதியில் பதிவான வாக்குகள் 25 சுற்றுகளாக எண்ணப்படுகிறது. மற்ற தொகுதி வாக்குகள் 20 சுற்றுகளுக்குள் முடிவடைந்து விடும். மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணி முடிக்கப்பட்ட பின்னர் ‘விவிபாட்’ எந்திரங்களில் சேகரித்து வைக்கப்பட்டு இருக்கும் ஒப்புகை சீட்டுகள் எண்ணப்படும். எனவே முன்னணி நிலவரம் மாலை 3 மணிக்குள் தெரியவந்தாலும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பினை வெளியிட நள்ளிரவு ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் செல்வதற்கு என தனித்தனியாக சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு பாதைகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள சாரநாதன் பொறியியல் கல்லூரி வளாகம் மற்றும் முன்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

Related Tags :
Next Story