மகன் கண் எதிரே பரிதாபம் சாலை விபத்தில் பெண் பலி


மகன் கண் எதிரே பரிதாபம் சாலை விபத்தில் பெண் பலி
x
தினத்தந்தி 24 May 2019 3:00 AM IST (Updated: 23 May 2019 10:26 PM IST)
t-max-icont-min-icon

மகனுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற பெண், வேகத்தடையில் ஏறி இறங்கியபோது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்து பரிதாபமாக இறந்தார்.

ஆலந்தூர்,

சென்னையை அடுத்த பள்ளிக்கரணை மயிலை பாலாஜி நகரை சேர்ந்தவர் சந்திரா (வயது 55). இவருடைய மகன் மோகன்ராஜ் (27). சம்பவத்தன்று மோகன்ராஜ், தனது தாய் சந்திராவை மோட்டார்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு கோயம்பேடில் இருந்து வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார்.

வேளச்சேரி பிரதான சாலை அருகே உள்ள இணைப்பு சாலையில் சென்றபோது, அங்கிருந்த வேகத்தடையில் மோட்டார்சைக்கிள் ஏறி இறங்கியது. இதில் நிலைதடுமாறியமோகன் ராஜ், சந்திரா இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்தனர்.

இதில் சந்திரா, பின்புறமாக விழுந்ததால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே மகன் கண் எதிரேயே பரிதாபமாக இறந்தார். மோகன்ராஜ் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பலியான சந்திரா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story