பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில், தி.மு.க. வேட்பாளர் சண்முக சுந்தரம் வெற்றி


பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில், தி.மு.க. வேட்பாளர் சண்முக சுந்தரம் வெற்றி
x
தினத்தந்தி 24 May 2019 4:00 AM IST (Updated: 23 May 2019 11:57 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சண்முக சுந்தரம் வெற்றி பெற்றார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மகேந்திரனும், தி.மு.க. சார்பில் சண்முகசுந்தரம், அ.ம.மு.க. சார்பில் முத்துக்குமார், மக்கள் நீதி மய்யம் சார்பில் மூகாம்பிகா, நாம் தமிழர் கட்சி சார்பில் சனுஜா உள்பட 14 பேர் போட்டியிட்டனர். இந்த தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 20 ஆயிரத்து 276 வாக்காளர்கள். இவர்களில் 10 லட்சத்து 76 ஆயிரத்து 314 பேர் வாக்களித்தனர். இந்த நிலையில் ஓட்டு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. மேலும் சட்டசபை தொகுதிகள் வாரியாக குலுக்கல் முறையில் 5 வாக்குச்சாவடிகள் தேர்வு செய்யப்பட்டு, ஒப்புகை சீட்டுகள் எண்ணப்பட்டன. முடிவில் தி.மு.க. வேட்பாளர் சண்முக சுந்தரம் 5 லட்சத்து 54ஆயிரத்து 230 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க. வேட்பாளர் மகேந்திரன் 3 லட்சத்து 78 ஆயிரத்து 347 வாக்குகள் பெற்றார். இதன் மூலம் தி.மு.க வேட்பாளர் சண்முக சுந்தரம் 1 லட்சத்து 75 ஆயிரத்து 883 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான ஓட்டுகள் மற்றும் ஒவ்வொரு வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:-

மொத்த வாக்குகள்- 15,20,276

பதிவானவை- 10,76,314

1. கே.சண்முகசுந்தரம் (தி.மு.க.)- 5,54,230

2. சி.மகேந்திரன் (அ.தி.மு.க.)- 3,78,347

3. ஆர்.மூகாம்பிகா ரத்தினம் (ம.நீ.ம.)- 59,693

4. யு.சனுஜா (நாம் தமிழர் கட்சி)- 31,483

5. எஸ்.முத்துக்குமார் (அ.ம.மு.க.)- 26,663

6. ஆர்.ஜி.ராஜேந்திரன் (சுயேட்சை)- 5247

7. ஏ.கணேசமூர்த்தி (பகுஜன் சமாஜ்)- 3,187

8, கே.ராமசாமி (சுயேச்சை)- 2737

9. வி.சண்முகசுந்தரம் (சுயேச்சை)- 1273

10. சி.முத்துக்குமார் (சுயேச்சை)- 943

11. எஸ்.அன்சாரி (சுயேச்சை)- 908

12. ஜி.பாலாஜி (சுயேச்சை)- 806

13. கே.என்.சண்முகசுந்தரம் (சுயேச்சை)- 714

14. சி.மாணிக்கவேல் (சுயேச்சை) - 534

நோட்டா- 15,110.

தி.மு.க. வேட்பாளர் சண்முகசுந்தரத்துக்கு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ராமதுரை முருகன் வழங்கினார். அப்போது தேர்தல் பொதுபார்வையாளர் சுபீர்குமார், நெடுஞ்சாலைத்துறை சிறப்பு வருவாய் அதிகாரி சரவணன், கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தென்றல் செல்வராஜ், கொ.ம.தே.க. மாவட்ட செயலாளர் நித்தியானந்தம், ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் குகன்மில்செந்தில், இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
1 More update

Next Story