விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் அமோக வெற்றி, மாணிக்கம் தாகூர்(காங்.)- 4,64,667 அழகர்சாமி (தே.மு.தி.க.)- 3,15,055 பரமசிவ அய்யப்பன்(அ.ம.மு.க.)-1,07,033


விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் அமோக வெற்றி, மாணிக்கம் தாகூர்(காங்.)- 4,64,667 அழகர்சாமி (தே.மு.தி.க.)- 3,15,055 பரமசிவ அய்யப்பன்(அ.ம.மு.க.)-1,07,033
x
தினத்தந்தி 23 May 2019 10:45 PM GMT (Updated: 23 May 2019 8:14 PM GMT)

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது..

விருதுநகர், 

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் அடங்கி உள்ளன. இந்த தொகுதியில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 14,80,600. பதிவானவை 10,66,217. வாக்குப்பதிவு சதவீதம் 72.01. இந்த தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக மாணிக்கம் தாகூர், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் தே.மு.தி.க. வேட்பாளராக அழகர்சாமி, அ.ம.மு.க. வேட்பாளராக பரமசிவ அய்யப்பன், மக்கள் நீதி மய்யம் வேட்பாளராக முனியசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் அருள்மொழி தேவன் உள்பட 28 பேர் போட்டியிட்டனர்.

இந்த தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை விருதுநகர் வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடந்தது. தேர்தல் அதிகாரியான கலெக்டர் சிவஞானம் தலைமையில் 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகளும் உதவி தேர்தல் அதிகாரி தலைமையில் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கைக்கு 14 மேஜைகள் போடப்பட்டு இருந்தன. மொத்தம் 23 சுற்றுகள் எண்ணப்பட்டன. காலையில் தபால் ஓட்டுகள் எண்ண தொடங்கியபோது, சர்வர் பழுதால் தபால் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. தபால் ஓட்டு எண்ணிக்கை 23 சுற்றுகள் முடிந்த பின்பு தொடங்கப்பட்டது. இதனால் தபால் ஓட்டு எண்ணிக்கை முடிவடைய நள்ளிரவு வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டது.

5 விவிபேட் எந்திரங்கள் தேர்வு செய்யப்பட்டு எண்ணப்பட்டன. இதில் திருமங்கலம் தொகுதியில் 293-வது வாக்குச்சாவடியில் தேர்வு செய்யப்பட்ட விவிபேட் எந்திரத்தில் வாக்குச்சீட்டுகள் எதுவும் இல்லை என தே.மு.தி.க. வேட்பாளர் அழகர்சாமி, தேர்தல் அதிகாரி சிவஞானத்திடம் புகார் தெரிவித்தார். இதுதொடர்பாக வாக்கு எண்ணிக்கையை நிறுத்த முடியாது என்றும், சட்டரீதியான நடவடிக்கை எடுத்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். 21 சுற்றுகளின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம்தாகூர் 1,49,612 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் அமோக வெற்றி பெற்றார். தே.மு.தி.க. 2-வது இடத்தை பிடித்தது.

1. மாணிக்கம்தாகூர்(காங்கிரஸ்)- 4,64,667

2. அழகர்சாமி(தே.மு.தி.க.)- 3,15,055

3. பரமசிவ அய்யப்பன்(அ.ம.மு.க.)-1,07,033

4. முனியசாமி(ம.நீ.ம.)- 56,815

5. அருள்மொழிதேவன்(நாம் தமிழர்)- 52,591

6. சக்கரவர்த்தி(அகில இந்திய புரட்சி தலைவர் மக்கள் முன்னேற்ற கழகம்)-2731

7. கணேஷ்குமார்(சுயே)- 1622

8. பெருமாள்சாமி(பகுஜன் சமாஜ்)-3707

9. தியாகராஜன்(சுயே) -850

10. கல்யாணசுந்தரம்(சுயே)-2,479

11. வள்ளிநாயகம்(சுயே)-2,289

12. பாக்கியராஜ்(சுயே)- 1529

13. தனுஷ்கோடி(சுயே)-3108

14. கவிதா(சுயே)-1632

15. சுகன் ராஜ்(சுயே)-2,435

16. இளங்கோ(சுயே)-935

17. பாலசந்தர்(சுயே)- 1,812

18. உமையொரு பாகம்(சுயே)-788

19. சங்கரநாராயணன்(சுயே)-3,701

20. சபரி பொன்ராஜ்(சுயே)- 5,662

21. செல்வக்குமார்(சுயே)- 842

22. தங்கப்பாண்டியன்(சுயே)- 1,495

23. கோவிந்தன்(சுயே)- 4,194

24. என்.அழகர்சாமி(சுயே)- 3,723

25. எம்.பாக்கியராஜ்(சுயே)- 822

26. செந்தில்குமார்(சுயே)- 2,714

27. பழனிசாமி(சுயே)- 1,060

28. மணிகண்டன்(சுயே)- 1,964

நோட்டா- 17,087

மாணிக்கம் தாகூருக்கு தி.மு.க. கூட்டணி கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story