மத்தியில் மீண்டும் ஆட்சி: பாரதீய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


மத்தியில் மீண்டும் ஆட்சி: பாரதீய ஜனதா கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 23 May 2019 10:30 PM GMT (Updated: 23 May 2019 10:08 PM GMT)

மத்தியில் மீண்டும் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்துள்ளதையொட்டி நெல்லை, தென்காசியில் அந்த கட்சியினர் பட்டாசுகள் வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நெல்லை,

நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாரதீய ஜனதா கட்சி அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது. மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்க உள்ளார். இதையொட்டி நெல்லை வண்ணார்பேட்டை செல்லபாண்டியன் சிலை அருகில் நேற்று மாலை பாரதீய ஜனதா கட்சியினர் திரண்டனர். அங்கு பட்டாசுகள் வெடித்து, ஆடிப்பாடி கொண்டாடினர். மேலும் அந்த வழியாக சென்ற பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

நிகழ்ச்சிக்கு நெல்லை கிழக்கு மாவட்ட பொதுச் செயலாளர் தமிழ்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச் செயலாளர் டி.வி.சுரேஷ், மகாராஜன், வக்கீல் அணி மாநில செயலாளர் பாலாஜி கிருஷ்ணசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட துணைத்தலைவர் அழகுராஜ், இளைஞர் அணி மாவட்ட தலைவர் ஆவுராஜா, தச்சநல்லூர் மண்டல தலைவர் கார்த்திகேயன், மாவட்ட செயலாளர் முத்துபலவேசம், ஜெயசித்ரா, மானூர் ஒன்றிய தலைவர் அங்குராஜ், பாளையங்கோட்டை மண்டல தலைவர் குமரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தென்காசி

தென்காசி பழைய பஸ் நிலையம் பெரியகோவில் முன்பு நகர தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் பா.ஜனதாவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் நகர பொதுச்செயலாளர்கள் குத்தாலிங்கம், முத்துகிருஷ்ணன், நகர செயலாளர் பாண்டுரங்கன், நகர துணைத்தலைவர் மந்திரமூர்த்தி, நகர பொருளாளர் நாராயணமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கருப்பசாமி ராஜ்குமார், முன்னாள் நகரசபை கவுன்சிலர் சங்கரசுப்பிரமணியன்,நகர எஸ்.சி.அணி தலைவர் சந்திரன்,மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சிவகிரி

சிவகிரி பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி கலையரங்கம் முன்பு பா.ஜனதா கட்சியினர் நெல்லை மாவட்ட பொறியாளர் அணி நிர்வாகி சேதுராஜா தலைமையில் இனிப்பு வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர்.


Next Story