2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் திடீர் கோளாறு - கடலூர் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு


2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் திடீர் கோளாறு - கடலூர் வாக்கு எண்ணும் மையத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 24 May 2019 4:15 AM IST (Updated: 24 May 2019 5:42 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் வாக்கு எண்ணும் மையத்தில் 2 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் திடீரென ஏற்பட்ட கோளாறால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர்,

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. இதில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் கடலூர் தேவனாம்பட்டினம் அரசு பெரியார் கலைக்கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

இதில் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நடுவீரப்பட்டு, குமளங்குளம் ஆகிய வாக்குச்சாவடிகளுக் கான வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை அதிகாரிகள் எண்ணுவதற்கு தயாரானார்கள். அப்போது அந்த 2 எந்திரங்களும் இயங்கவில்லை. எந்திரத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் வாக்கு எண்ணும் பணியில் பாதிப்பு ஏற்பட்டது.

இதை தொடர்ந்து மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான அன்புசெல்வன் அங்கு வந்தார். சிறிது நேரத்திற்கு பின்னர், எந்திர கோளாறு சரி செய்யப்பட்டு, அதில் பதிவாகி இருந்த வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில நிமிடங்களிலேயே இதுபோன்று கோளாறு ஏற்பட்டதால், வாக்கு எண்ணும் மையத்தில் அரசியல் கட்சி முகவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story