நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் சட்டசபை தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம்
நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் சட்டசபை தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற ஓட்டு விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
நெல்லை,
நெல்லை நாடாளுமன்ற தொகுதியில் நெல்லை, பாளையங்கோட்டை, ஆலங்குளம், அம்பை, ராதாபுரம், நாங்குநேரி ஆகிய 6 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மூலம் பதிவான ஓட்டுகள் நெல்லை அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஞானதிரவியம் 5 லட்சத்து 22 ஆயிரத்து 623 ஓட்டுகள் பெற்றார். இவர் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியனை விட 1 லட்சத்து 85 ஆயிரத்து 457 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
பாளையங்கோட்டை தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியத்துக்கு 86 ஆயிரத்து 822 ஓட்டுகள் கிடைத்துள்ளது. இந்த தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் மனோஜ்பாண்டியன் 34 ஆயிரத்து 648 ஓட்டுகள் பெற்றார். 52 ஆயிரத்து 174 ஓட்டுகள் தி.மு.க. வேட்பாளர் ஞானதிரவியத்துக்கு கூடுதலாக கிடைத்துள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் அதிகம் உள்ள பாளையங்கோட்டை தொகுதி தி.மு.க. வெற்றிக்கு கை கொடுத்துள்ளது.
சட்டசபை தொகுதி வாரியாக வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகள் விவரம் வருமாறு:-
நெல்லை தொகுதி
ஞானதிரவியம் (தி.மு.க.):- 84,792
மனோஜ்பாண்டியன் (அ.தி.மு.க.):- 61,677
மைக்கேல் ராயப்பன் (அ.ம.மு.க.):- 15,006
சத்யா (நாம் தமிழர் கட்சி):- 8,343
வெண்ணிமலை (மக்கள் நீதி மய்யம்):-6,523
பாளையங்கோட்டை
ஞானதிரவியம் (தி.மு.க.):- 86,822
மனோஜ் பாண்டியன் (அ.தி.மு.க.):- 34,648
மைக்கேல் ராயப்பன் (அ.ம.மு.க.):- 8,815
வெண்ணிமலை (மக்கள் நீதி மய்யம்):- 7,349
சத்யா (நாம் தமிழர் கட்சி):- 6,382
ஆலங்குளம்
ஞானதிரவியம் (தி.மு.க.):- 91,229
மனோஜ் பாண்டியன் (அ.தி.மு.க.):- 71,125
மைக்கேல் ராயப்பன் (அ.ம.மு.க.):- 7,744
சத்யா (நாம் தமிழர் கட்சி):- 11,300
வெண்ணிமலை (மக்கள் நீதி மய்யம்):- 1,839
அம்பை
ஞானதிரவியம் (தி.மு.க.):- 79,335
மனோஜ்பாண்டியன் (அ.தி.மு.க.):- 58,648
மைக்கேல் ராயப்பன் (அ.ம.மு.க.):- 8,696
சத்யா (நாம் தமிழர் கட்சி):- 7,891
வெண்ணிமலை (மக்கள் நீதி மய்யம்):- 3,356
ராதாபுரம்
ஞானதிரவியம் (தி.மு.க.):- 88,735
மனோஜ்பாண்டியன் (அ.தி.மு.க.):- 58,269
மைக்கேல் ராயப்பன் (அ.ம.மு.க.):- 6,385
சத்யா (நாம் தமிழர் கட்சி):- 8,800
வெண்ணிமலை (மக்கள் நீதி மய்யம்):- 1,884
நாங்குநேரி
ஞானதிரவியம் (தி.மு.க.):- 86,306
மனோஜ்பாண்டியன் (அ.தி.மு.க.):- 51,596
மைக்கேல் ராயப்பன் (அ.ம.மு.க.):- 15,114
சத்யா (நாம் தமிழர் கட்சி):- 6,775
வெண்ணிமலை (மக்கள் நீதி மய்யம்):- 1,988
Related Tags :
Next Story