மாவட்ட செய்திகள்

வளசரவாக்கத்தில் வீட்டில் போதை பொருள் பதுக்கிய 5 பேர் கைது + "||" + The home is stuffed with narcotics 5 people arrested

வளசரவாக்கத்தில் வீட்டில் போதை பொருள் பதுக்கிய 5 பேர் கைது

வளசரவாக்கத்தில் வீட்டில் போதை பொருள் பதுக்கிய 5 பேர் கைது
வளசரவாக்கத்தில் வீட்டில் போதை பொருள் பதுக்கி வைத்து இருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, சப்–இன்ஸ்பெக்டர்கள் தீர்த்தகிரி, ஜெயராமன் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் மாந்தோப்பு பகுதியில் சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளில் நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர்.

அதில் அவர்கள், குன்றத்தூர் நந்தம்பாக்கத்தை சேர்ந்த அமர்நாத் (வயது 25), சரவணன் (26) என்பது தெரிந்தது. போலீசாரிடம் இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவர்களிடம் சோதனை செய்தனர்.

அதில் அவர்களிடம் போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வளசரவாக்கத்தில் உள்ள ஒரு வீட்டில் மேலும் போதை பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பதும் தெரிந்தது.

இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் வில்லிவாக்கத்தை சேர்ந்த முருகேசன் என்ற குமார் (33), தமிழ்வாணன் (47), சசிதரன் (29) ஆகிய மேலும் 3 பேரை கைது செய்தனர்.

விசாரணையில், ராமநாதபுரத்தில் இருந்து நண்பர்கள் மூலமாக அந்த போதைபொருட்கள் இவர்களுக்கு வந்ததாகவும், அதை இந்த வீட்டில் பதுக்கி வைத்து, இங்குள்ள நண்பர்களிடம் கொடுத்துவிட்டு பணம் வாங்க முயற்சி செய்ததும் தெரிந்தது. இவர்களிடம் இருந்து 10 கிலோ போதை பொருட்கள், ஒரு மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதான 5 பேரிடம் இருந்தும் பறிமுதல் செய்யப்பட்டது எந்த வகையான போதை பொருள்? என்பதை கண்டறிய ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் இவர்கள் இதற்கு முன்பு இதுபோல் போதை பொருள் கடத்தல் வழக்கில் சம்பந்தப்பட்டு உள்ளனரா?. இவர்களுக்கு இந்த போதை பொருளை வினியோகம் செய்தது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பெண் தற்கொலைக்கு காரணமான சுய உதவி குழு தலைவி கைது ரூ.10 லட்சம் மோசடி செய்தது அம்பலம்
திருச்சி அரியமங்கலத்தில் பெண் தற்கொலைக்கு காரணமான சுயஉதவி குழு தலைவியை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் ரூ.10 லட்சம் மோசடி செய்ததும் அம்பலம் ஆனது.
2. இலங்கை குண்டுவெடிப்பு பயங்கரவாதிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டனர்; ரனில் விக்ரமசிங்கே
இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் குற்றச்சாட்டு கூறப்பட்ட அனைத்து பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டு விட்டனர் என பிரதமர் ரனில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
3. வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி 40 பேரிடம் ரூ.78 லட்சம் மோசடி; ஒருவர் கைது
வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக கூறி 40 பேரிடம் ரூ.78 லட்சம் மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டார். மேலும் இதுதொடர்பாக 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. தொழிலதிபரின் சேமிப்பு கணக்கில் இருந்து ரூ.34½ லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளர் கைது
தொழிலதிபரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.34½ லட்சம் மோசடி செய்த வங்கி மேலாளரை போலீசார் கைது செய்தனர்.
5. கிளியனூர் அருகே வாகன சோதனை: மது பாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்கள் கைது
புதுவையில் இருந்து இரு சக்கர வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்திய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...