சென்னை கடற்கரை- செங்கல்பட்டு பிரிவில் ஜூன் 1-ந்தேதி முதல் அதிவேக மின்சார ரெயில் இயக்கப்படும் - தெற்கு ரெயில்வே அறிவிப்பு
சென்னை கடற்கரை- செங்கல்பட்டு பிரிவில் ஜூன் 1-ந்தேதி முதல் அதிவேக மின்சார ரெயில் இயக்கப்படும் என தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
சென்னை,
சென்னை பரங்கிமலை ரெயில் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலை 24-ந்தேதி மின்சார ரெயிலில் படியில் தொங்கி பயணம் செய்த 5 பேர் அங்கிருந்த சுவரில் மோதி பலியான சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்துக்கு காரணம் மின்சார ரெயிலை, எக்ஸ்பிரஸ் ரெயில் வழித்தடத்தில் இயக்கப்பட்டதே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து சென்னை கடற்கரை-செங்கல்பட்டு பிரிவில் காலை மற்றும் மாலை நேரங்களில் இயக்கப்பட்டு வந்த அதிவேக மின்சார ரெயில் சேவையை தெற்கு ரெயில்வே நிர்வாகம் ரத்து செய்தது. இதனால் ரெயில் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
பல்வேறு மாற்று ஏற்பாடுகள் தெற்கு ரெயில்வே சார்பில் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து மாற்று ஏற்பாடுகளை ரெயில்வே பாதுகாப்பு கமிஷனர் ஆய்வுக்கு பின்னர் மீண்டும் அதிவேக மின்சார இயக்க அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் 10 மாதங்களுக்கு பின்னர் வரும் ஜூன் 1-ந்தேதி முதல் இந்த அதிவேக ரெயில் சேவை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
சென்னை கடற்கரை-செங்கல்பட்டு, திருமால்பூர் இடையே அதிவேக மின்சார ரெயில் இயக்கப்படும்.
*செங்கல்பட்டு-சென்னை கடற்கரை இடையே அதிவேக மின்சார ரெயில் காலை 7.50, 8.05, 8.25, 8.50 மணிக்கும், திருமால்பூர்-கடற்கரை இடையே அதிவேக மின்சார ரெயில் காலை 7.05, 8 மணிக்கும், கடற்கரை-திருமால்பூர் இடையே விரைவு மின்சார ரெயில் மாலை 6.13 மணிக்கு இயக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story