சேலம் அருகே பரபரப்பு ஜனநாயக வாலிபர் சங்க பிரமுகரின் ஆட்டோ தீ வைத்து எரிப்பு


சேலம் அருகே பரபரப்பு ஜனநாயக வாலிபர் சங்க பிரமுகரின் ஆட்டோ தீ வைத்து எரிப்பு
x
தினத்தந்தி 26 May 2019 3:45 AM IST (Updated: 25 May 2019 8:17 PM IST)
t-max-icont-min-icon

சேலம் அருகே ஜனநாயக வாலிபர் சங்க பிரமுகரின் ஆட்டோ தீ வைத்து எரிக்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சேலம், 

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–

சேலம் அருகே உள்ள தாதம்பட்டி காந்திநகரை சேர்ந்தவர் மாதவன் (வயது 36). இந்திய ஜனநாயக வாலிபர் சங்க பிரமுகரான இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். மாதவன் நேற்று முன்தினம் இரவு வீடு அருகே ஆட்டோவை நிறுத்தினார். பின்னர் அவர் வீட்டுக்கு சென்று தூங்கினார்.

இந்த நிலையில் நள்ளிரவில் ஆட்டோ திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் இதுகுறித்து மாதவனுக்கு தகவல் கொடுத்தனர். அவரும், உறவினர்களும் விரைந்து சென்று ஆட்டோவில் எரிந்த தீயை அணைக்க போராடினர்.

ஆனால் அதற்குள் ஆட்டோ முழுவதுமாக எரிந்து சேதமானது. இந்த ஆட்டோவுக்கு மர்ம ஆசாமிகள் தீ வைத்ததாக புகார் கூறப்படுகிறது.

இதுகுறித்து வீராணம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. முன்விரோதம் காரணமாக ஆட்டோவிற்கு யாராவது தீ வைத்து எரித்தார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story