தூத்துக்குடியில் வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


தூத்துக்குடியில் வாகனங்களை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x
தினத்தந்தி 25 May 2019 10:45 PM GMT (Updated: 25 May 2019 6:21 PM GMT)

தூத்துக்குடியில் காவல்துறைக்கு சொந்தமான வாகனங்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக வளாகத்தில் நேற்று காலையில் மாவட்ட காவல்துறையின் கனரக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா? என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆய்வு செய்தார். பின்னர் வாகனங்களை சிறப்பாக பராமரித்து வரும் ஓட்டுனர்களுக்கு அவர் வெகுமதி வழங்கினார்.

இதைத்தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பா ஆய்வு நடத்தி அறிவுரை வழங்கினார்.

மேலும், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தில்லை நாகராஜன் (சிப்காட்), ஜோசப் ஜெட்சன் (ஸ்ரீவைகுண்டம்), பத்மகுமாரி (ஆழ்வார்திருநகரி), வனசுந்தர் (எட்டயபுரம்) மற்றும் உதவி ஆய்வாளர்கள் உள்பட 104 போலீசாருக்கு வெகுமதி வழங்கி பாராட்டினார். இந்த கூட்டத்தில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பொன்ராமு, வேதரத்தினம், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் பிரகாஷ் (தூத்துக்குடி நகர்), பாரத் (திருச்செந்தூர்), சகாய ஜோஸ் (ஸ்ரீவைகுண்டம்), ஜெபராஜ் (கோவில்பட்டி), ஜெயக்குமார் (விளாத்திகுளம்), ரவிசந்திரன் (மணியாச்சி), மாவட்ட குற்றப்பிரிவு ரமேஷ், நில மோசடி தடுப்பு பிரிவு பால்துரை, ஆயுதப்படை மாரியப்பன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கிறிஸ்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story