வாசுதேவநல்லூரில் பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி காசாளர் பலி


வாசுதேவநல்லூரில் பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதி காசாளர் பலி
x
தினத்தந்தி 25 May 2019 10:30 PM GMT (Updated: 25 May 2019 6:29 PM GMT)

வாசுதேவநல்லூரில் பாலத்தின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் காசாளர் பலியானார். வாலிபர் படுகாயம் அடைந்தார்.

வாசுதேவநல்லூர், 

நெல்லை மாவட்டம் புளியங்குடி தெற்கு தெரு கற்பக வீதியைச் சேர்ந்தவர் தங்கசாமி (வயது 70). இவர் வாசுதேவநல்லூர் அருகே ஆத்துவழி மெயின் ரோட்டில் உள்ள பெட்ரோல் பங்கில் காசாளராக வேலை செய்து வந்தார். இவருடன், அந்த பெட்ரோல் பங்கில் வெள்ளானைக்கோட்டையைச் சேர்ந்த பொன்னுசாமி மகன் சுரேஷ் (35) ஊழியராக பணியாற்றி வரு கிறார்.

நேற்று முன்தினம் இரவில் வேலை முடிந்ததும், இவர்கள் 2 பேரும் ஒரு மோட்டார் சைக்கிளில் தங்களது வீட்டுக்கு புறப்பட்டனர். வாசுதேவநல்லூர் மாரியம்மன் கோவில் ஓடைப்பாலத்தில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி, பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த தங்கசாமி, சுரேஷ் ஆகிய 2 பேரையும் சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தங்கசாமி சிறிதுநேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சுரேசுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், வாசுதேவநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Next Story