குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நாம் இந்துக்கள் கட்சி கூட்டத்தில் தீர்மானம்


குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் நாம் இந்துக்கள் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 25 May 2019 10:15 PM GMT (Updated: 25 May 2019 6:37 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் இந்துக்கள் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெல்லை, 

நாம் இந்துக்கள் கட்சி செயல்வீரர்கள் கூட்டம், நெல்லை தச்சநல்லூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடந்தது. மாநில தலைவர் கணேஷ்பாபு பாண்டியன் தலைமை தாங்கினார். நெல்லை மாநகர மாவட்ட தலைவர் செல்வராஜ், செயலாளர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு:-

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனை உள்ளாட்சி அதிகாரிகள் கவனத்தில் கொண்டு குடிநீர் பிரச்சினையை தீர்க்க உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நெல்லை மாநகரில் நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.

மாவட்டத்தில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் கொடுமைகளை கட்டுப்படுத்த போலீஸ் தனிப்படை அமைக்க வேண்டும். உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி அனைத்து வழிபாட்டு தலங்களிலும் உள்ள கூம்பு வடிவ ஒலிப்பெருக்கிகளை அகற்ற வேண்டும். இதில் பாகுபாடு காட்டக்கூடாது. இந்து சமய அறநிலைய ஆட்சித்துறைக்கு சொந்தமான குளங்கள், இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலத்தை பாதுகாக்க வேண்டும்.

மேற்கண்டவை உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நெல்லை மாநகர பொருளாளர் மகாராஜன், புறநகர் மாவட்ட தலைவர் சதீஷ்குமார், பொருளாளர் கார்த்திகேயன் உள் பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story