சகோதரிகள் மாயம்; போலீசார் விசாரணை


சகோதரிகள் மாயம்; போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 26 May 2019 3:45 AM IST (Updated: 26 May 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நதியாவும், அவருடைய தங்கையும் கடந்த 23–ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பெரியவளையம் கிராமத்தை சேர்ந்தவர் அறிவழகன்(வயது 50). இவருக்கு பிரகாஷ்(20) என்ற மகனும், நதியா(23) உள்பட 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நதியாவும், அவருடைய தங்கையும் கடந்த 23–ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றனர். பின்னர் அவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர், பிரகாஷ் ஆகியோர் உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடியும் 2 பேரும் கிடைக்கவில்லை. இது குறித்து ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் பிரகாஷ் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story