உரிமம் பெறாமல் வீட்டு உபயோக பூச்சி மருந்துகள் விற்றால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை


உரிமம் பெறாமல் வீட்டு உபயோக பூச்சி மருந்துகள் விற்றால் நடவடிக்கை கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 25 May 2019 11:00 PM GMT (Updated: 25 May 2019 7:11 PM GMT)

உரிமம் பெறாமல் வீட்டு உபயோக பூச்சி மருந்துகள் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கடைகளில் எலி விஷ மருந்துகள், கரப்பான் பூச்சி கொல்லி மருந்துகள் மற்றும் கொசுவிரட்டி போன்ற வீட்டு உபயோக பூச்சி மருந்துகளை விற்பனை செய்யவும், இருப்பு வைக்கவும் பூச்சி மருந்து விற்பனை உரிமம் அவசியம் பெற வேண்டும். அதனை உரிமம் இல்லாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கான உரிமத்தினை தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஒரு பூச்சி மருந்துக்கு ரூ.500 வீதம் அதிகபட்சம் ரூ.7 ஆயிரத்து 500 செலுத்தி உரிமம் பெற்று கொள்ளலாம். உரிமம் பெறாமல் விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது பூச்சி மருந்து சட்டத்தின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். எனவே, அனைத்து பெட்டிக்கடை, மளிகைக்கடை மற்றும் சூப்பர் மார்க்கெட் விற்பனையாளர்கள் உடன் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் உரிமம் பெற்று விற்பனை செய்ய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், விற்பனை நிலையங்களில் வீட்டில் பயன்படுத்தும் பூச்சி மருந்துகளை உணவு பொருட்கள் அருகில் வைத்து விற்பனை செய்யாமல் தனியாக இருப்பு வைத்து விற்பனை செய்ய வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மேற்கண்ட வீட்டு உபயோக பூச்சி மருந்துகளை விற்பனை செய்யக்கூடாது.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

Next Story