கட்டாய விபசாரத்தில் தள்ளப்பட்ட 100 பெண்கள் மீட்பு : 10 ஏஜெண்டுகள் கைது


கட்டாய விபசாரத்தில் தள்ளப்பட்ட 100 பெண்கள் மீட்பு : 10 ஏஜெண்டுகள் கைது
x
தினத்தந்தி 25 May 2019 11:45 PM GMT (Updated: 25 May 2019 10:34 PM GMT)

காமாட்டி புராவில் கட்டாய விபசாரத்தில் தள்ளப்பட்ட 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக 10 ஏஜெண்டுகள் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

மும்பை காமாட்டி புராவில் அரசு அனுமதியுடன் விபசார விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு வெளிமாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களை வேலை வாங்கி தருவதாக அழைத்து வந்து கட்டாய விபசாரத்தில் தள்ளப்படுவதாக உதவி போலீஸ் கமிஷனர் ராஷ்மி கரந்திகருக்கு புகார் வந்தது.

இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு டி.பி. மார்க் போலீசாருக்கு உதவி கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு போலீசார் காமாட்டி புராவில் செயல்பட்டு வந்த விபசார விடுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு கட்டாய விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டு இருந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களை போலீசார் மீட்டனர். மேலும் அவர்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய 10 ஏஜெண்டுகளை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த ரூ.6 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மீட்கப்பட்ட பெண்களை காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். போலீசார் மீட்கப்பட்ட வெளிமாநில பெண்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.


Next Story