மாநில காங்கிரஸ் தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் : அசோக் சவான் கருத்து


மாநில காங்கிரஸ் தலைவர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் : அசோக் சவான் கருத்து
x
தினத்தந்தி 26 May 2019 6:00 AM IST (Updated: 26 May 2019 4:15 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தல் தோல்வி காரணமாக மாநில காங்கிரஸ் தலைவர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அசோக் சவான் கருத்து தெரிவித்தார்.

மும்பை, 

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் கடந்த 23-ந் தேதி வெளியானது. இந்த தேர்தலில் பா.ஜனதா கட்சி மாபெரும் வெற்றியை பதிவு செய்தது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் சோதனைக்காலம் இந்த தேர்தலிலும் தொடர்ந்து விட்டது.

இந்த நிலையில் தேர்தல் முடிவு குறித்து பேட்டியளித்த அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக கூறினார்.

இதுகுறித்து மராட்டிய மாநில காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாடாளுன்ற தேர்தல் தோல்விக்கு ராகுல்காந்தியை மட்டுமே பொறுப்பாக்க முடியாது. இந்த பொறுப்பு கட்சியில் அனைவருக்குமானது. ராகுல் காந்தி கட்சிக்காக கடுமையாக உழைத்தார். மாநில அளவில் பொறுப்பில் உள்ள அனைத்து தலைவர்களும் தோல்விக்கு பொறுப்பேற்று தங்கள் பதவியை துறக்கவேண்டும். புதிய அணி கட்சியை முன்னெடுத்து செல்லவேண்டும். நான் எனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் மராட்டியத்தில் பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி அணி தங்களது கூட்டணி தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்ததாக கூறிய அசோக் சவான், அது பா.ஜனதாவின் “பி” அணியாக செயல்பட்டதாக தெரிவித்தார்.


Next Story