ஒரத்தநாடு அருகே ஏரி, குளங்களை தூர்வாரிய கிராம மக்கள்


ஒரத்தநாடு அருகே ஏரி, குளங்களை தூர்வாரிய கிராம மக்கள்
x
தினத்தந்தி 26 May 2019 10:45 PM GMT (Updated: 2019-05-27T01:00:03+05:30)

ஒரத்தநாடு அருகே ஏரி, குளங்களை கிராம மக்களே தூர்வாரினர்.

ஒரத்தநாடு,

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகா ஆம்பலாப்பட்டு கிராமத்தில் குறிச்சிக்குளம் ஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் ஆயிரக்கணக்காக ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. மேலும், இந்த ஏரியை பொதுமக்கள் குளிக்கவும் பயன்படுத்தி வந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில ஆண்டுகளாக குறிச்சிக்குளம் ஏரி சரிவர தூர்வாரப்படாமல் இருந்தது. இதனால் ஏரியில் போதுமான அளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடியவில்லை.

இதை தொடர்ந்து குறிச்சிக்குளம் ஏரியை தாங்களே தூர்வார ஆம்பலாபட்டு கிராம மக்கள் முடிவு செய்தனர். அதன்படி கிராம மக்கள் ஒன்று திரண்டு அந்த ஏரியை தூர்வாரினர். இதே போன்று இந்த பகுதியில் உள்ள ஏரி, குளம், குட்டைகளை ஆம்பலாபட்டு கிராம மக்கள் தூர்வாரினர். கிராம மக்களே, அரசை எதிர்பார்க்காமல் சொந்த செலவில் குளம், ஏரிகளை தூர்வாருவதால் அந்த பகுதி பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Next Story