திருச்சி அருகே சோகம் ரெயில்முன் பாய்ந்து வயதான தம்பதி தற்கொலை போலீசார் விசாரணை
திருச்சி அருகே ரெயில் முன் பாய்ந்து வயதான தம்பதி தற்கொலை செய்துகொண்டனர். இதுதொடர்பாக ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே காடையூர் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சாத்தப் பன் (வயது 78). இவரது மனைவி சுப்பாத்தாள் (63). இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறினர். ஆங்காங்கே சென்று வந்த அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி அருகே பெட்டவாய்த்தலை பகுதிக்கு வந்தனர். அங்கு பஸ் நிலையம் அருகே இருந்துள் ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலை பெட்ட வாய்த்தலை பஸ் நிறுத்தம் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் அவர்கள் பிணமாகக்கிடந்தனர். இது குறித்து தகவல் அறிந்த ஜங்ஷன் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் 2 பேரும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதைதொடர்ந்து 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
வயதான தம்பதி தற்கொலை செய்து கொண்டது தொடர் பாக ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின் றனர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இவர்கள் பெட்டவாய்த் தலை வந்தது ஏன்? தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
மேலும் இறந்த சாத்தப்பன் கவுண்டரின் மகன் குடும்பத்தி னருக்கு ரெயில்வே போலீசார் தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து காங்கேயத்தில் இருந்து அவர் புறப்பட்டு இன்று (திங்கட்கிழமை) திருச்சி வருவதாக தெரி வித்துள்ளனர். 2 பேரின் உடல்களும் இன்று பிரேத பரிசோதனைக்குட்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

Related Tags :
Next Story