ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கிலோ கஞ்சாவுடன் பெண் கைது


ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கிலோ கஞ்சாவுடன் பெண் கைது
x
தினத்தந்தி 26 May 2019 10:28 PM GMT (Updated: 2019-05-27T03:58:25+05:30)

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஒரு கிலோ கஞ்சாவுடன் பெண் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் விஜய பாஸ்கர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சாவடி வழியாக ரோந்து சென்றபோது அய்யம்பட்டி பகுதியைச் சேர்ந்த இந்திரா (வயது52) என்ற பெண் சந்தேகப்படும் நிலையில் நின்றுகொண்டு இருந்தார்.

அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.அப்போது அவரிடம் ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சப்–இன்ஸ்பெக்டர் விஜய பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து இந்திராவை கைது செய்தார். கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story