மாவட்ட செய்திகள்

ஈரோட்டில் பயங்கரம்; தறிப்பட்டறை தொழிலாளி அடித்துக்கொலை + "||" + Worker killed in Erode

ஈரோட்டில் பயங்கரம்; தறிப்பட்டறை தொழிலாளி அடித்துக்கொலை

ஈரோட்டில் பயங்கரம்; தறிப்பட்டறை தொழிலாளி அடித்துக்கொலை
ஈரோட்டில் தறிப்பட்டறை தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

ஈரோடு,

ஈரோடு மாணிக்கம்பாளையம் நேதாஜிநகர் சுப்பிரமணிவலசு பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 67). இவர் வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தறிப்பட்டறையில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி சாந்தி (55). இவர்களுக்கு விஜயலட்சுமி (36), சுப்புலட்சுமி (32) ஆகிய 2 மகள்களும், சிவக்குமார் (30) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் ராஜூ வழக்கம்போல் வேலைக்கு சென்றார். அதன்பின்னர் இரவு நீண்ட நேரமாகியும் அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. இதனால் ராஜூ இரவு வேலையும் சேர்த்து செய்வதாக வீட்டில் இருந்தவர்கள் நினைத்து கொண்டனர்.

இந்தநிலையில் நேற்று காலை சிக்கய்ய நாயக்கர் கல்லூரி அருகில் உள்ள காலி இடத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஈரோடு டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது முதியவர் ஒருவர் ரத்தக்கறையுடன் கொலை செய்யப்பட்டு கிடந்ததும், அவருடைய முகத்தில் காயங்கள் ஏற்பட்டு இருந்ததும் தெரியவந்தது.

விசாரணையில் இறந்தவர் ராஜூ என்பதும், அவர் நேற்று முன்தினம் இரவு 8 மணி அளவில் வழக்கம்போல் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது மர்மநபர்கள் அவரை கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளதும் தெரியவந்தது.

சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தை நுகர்ந்துவிட்டு சிறிது தூரத்தில் உள்ள ஒரு சுவர் வரை சென்று நின்றது. இதனால் கொலை செய்தவர்கள் அந்த வழியாக தப்பி சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ராஜூவின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜூவை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக கொலை செய்தனர்? என்று விசாரணை நடத்தி கொலையாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. முத்துப்பேட்டையில் மாட்டுக்கறி பிரியாணி வினியோகம் செய்ததால் பரபரப்பு போலீஸ் குவிப்பு
முத்துப்பேட்டையில் மாட்டுக்கறி பிரியாணி வினியோகம் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
2. குளச்சலில் துணிகரம் வீடுபுகுந்து பிளஸ்–2 மாணவியிடம் 2½ பவுன் நகை பறிப்பு மர்ம ஆசாமிக்கு போலீஸ் வலைவீச்சு
குளச்சலில் வீடு புகுந்து பிளஸ்–2 மாணவியிடம் 2½ பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
3. வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிய தச்சுதொழிலாளி வெட்டிக்கொலை தந்தைக்கு போலீஸ் வலைவீச்சு
கும்பகோணத்தில் வீட்டின் மொட்டை மாடியில் தூங்கிய தச்சு தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது தந்தையை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
4. கொடிவேரி–பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்ட பணிக்கு எதிர்ப்பு கோபி பகுதியில் 2 ஆயிரம் கடைகள் அடைப்பு; போலீஸ் குவிப்பு
கொடிவேரி– பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்ட பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து கோபி பகுதியில் 2 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டன. போலீஸ் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
5. வாகன சோதனையின்போது தகராறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது
வாகன சோதனையின்போது ஏற்பட்ட தகராறில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய அண்ணன்-தம்பி கைது செய்யப்பட்டனர்.